Headlines
Loading...
தவ்ஹீத் ஜமாஅத் எதிராக பொது பல சேனா பதிவு செய்த மத நிந்தனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தவ்ஹீத் ஜமாஅத் எதிராக பொது பல சேனா பதிவு செய்த மத நிந்தனை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு



பௌத்த மதத்தை இழிவு படுத்தியதாக குற்றம் சாட்டி தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் மீது பொது பல சேனாவினால் பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு மீண்டும் ஜூலை மாதம் 16ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையத்தில் நடத்தப்பட்ட மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் ஆற்றிய உரையில் பௌத்த மதத்தை இழிவு படுத்திப் பேசினார் என்று குற்றம் சாட்டி பொது பல சேனாவினால் கொழும்புபிரதான நீதிவான் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை மீண்டும் 16.07.2017ம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர்  சகோ. பர்சான் துணை தலைவர் சகோ. ரியாழ்சகோ. ரிழ்வான்சகோ. ரஸ்மின் மற்றும் இணையதள பொறுப்பாளர் சகோ. தவ்சீப் அஹ்மத் ஆகியோர் மன்றில் ஆஜரானார்கள்.

குறித்த வழக்கு விசாரனையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன மற்றும் மஞ்சுல பதிராஜஅஞ்சுல பெனடிக்சுகந்தி ஸ்ரீ வர்தனநுஸ்ரா ஸரூக் உள்ளிட்ட குழுவினர் ஆஜரானமை குறிப்பிடத்தக்கதாகும்.