Top News

மார்க்கத்தை மதிக்காத முஸ்லிம்(?) அரசியல்வாதிகள்



முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரதும் நடவடிக்கைகள் இஸ்லாமிய வரையறைகளை மீறுவதாகவும் இஸ்லாத்தை அவமதிப்பதாகவுமே அமைந்துள்ளமை கவலைக்குரியதாகும். இலங்கையின் முஸ்லிம் அரசியல் வரலாற்றில் இதற்கான பல உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

இதன் தொடரில் தற்போதும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சுய நலன்களுக்காக மார்க்கத்தை அற்பமாகக் கருதுகின்ற நிலையே நீடிக்கிறது.

இந்த ஒரு வார காலத்திற்குள் நடந்த இரு சம்பவங்கள் இதற்கு உதாணரமாகும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் சிலைக்கு மாலை அணிவிக்கும் வீடியோ காட்சி தற்போது பரவலாக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 
பிரதியமைச்சர் அமீர் அலி செங்கலடியில் சினிமா திரையரங்கினை தனது கரங்களால் திறந்துவைத்துள்ளார்.

கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் மலர் தட்டு வைத்தல், சிலைக்கு மாலை அணிவித்தல், கரம்  கூப்பி வணக்கம் தெரிவித்தல், தேங்காய் உடைத்தல், சூனியம் செய்தல், அதனை நம்புதல் என பல மார்க்கம் அனுமதிக்காத மாற்று மத அனுஷ்டானங்களை தமது அரசியலுக்காக செய்துள்ளனர். இன்றும் அதனையே செய்து வருகின்றனர்.

மார்க்க வரையறைகள் தொடர்பில் இன்று மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டு நிலையில் இந்த அரசியல்வாதிகள் மாத்திரம் இவ்வாறு நடந்து கொள்வதன் மர்மம் என்ன?
இவற்றை உலமா சபை கண்டும் காணாதிருப்பதேன்? இது பற்றி உலமாக்கள் பகிரங்கமாக மிம்பர் மேடைகளில் கண்டிப்பார்களா?

துரதிஷ்டவசமாக உலமாக்கள் கூட இந்த அரசியல்வாதிகளிடம் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். இதுதான் நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் மிகப் பெரிய சாபக் கேடாகும். 
Previous Post Next Post