Top News

வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் கௌரவிக்கும் நிகழ்வு

ஏ.எஸ்.எம்.ஜாவித்  

கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியில் மாணவர்களின் வகுப்பறைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இக்கல்லூரியின் பழைய மாணவர்களின் முழுப் பங்களிப்புடன் பல மில்லியன் ரூபாய் செலவில் 13 வகுப்பறைகளையும் ஒரு கேட்போர் கூடத்தையும் கொண்டதான மூன்று மாடிக் கட்டிடத்தை பூர்த்தி செய்து கொடுத்ததையிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப்பள்ளிவாசலின் ஏற்பாட்டில்  அதன் தலைவர் எஸ்.எம்.எம். இஸ்மத் தலைமையில் கடந்த சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம பேச்சாளராக நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் சவுன்சில் மற்றும் முஸ்லிம் மீடியாபோரம் ஆகியவற்றின் தலைவருமான என்.எம்.அமீன், அகில இலங்கை ஜமிய்யதல் உலமா சபையின் கொழும்புக் கிளையின் தலைவர் அஷ்-ஷெய்க் முப்தி அஹமட் அவர்கள் கௌரவப் பேச்சாளராகவும், சிறப்புச் பேச்சாளர்களாக சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி, நசீர் அஹமட் உள்ளிட்ட பல நலன் விரும்பிகள், பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கட்டிடத்திற்கு நிதியுதவியளித்த பழைய மாணவர் சங்கத் தலைவரும் பாடசாலையின் அதிபருமான கே.எம்.எம். நாளிர், பிரதித் தலைவர் பௌசுல் அமீர், செயலாளர் ஸாதிக் சிஹான் உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும் மலை அனுவிக்கப்பட்டு பேண்ட் வாத்தியக் குழுவினரின் வரவேற்புடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின் இறுதியின் நன்றியுரையை பள்ளிவாசல் பரிபாலன சபையின் செயலாளர் ஏ.எச்.கரீம் வழங்கினார்.










Previous Post Next Post