Top News

மரவேர்களுக்கு விளம்பல்...சொல்லும் கதை

எஸ்.றிபான் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ரவூப் ஹக்கீம் அணி என்றும், ஹஸன்­அலி அணி என்றும் இரண்டு அணிகள் உரு­வா­கி­யுள்­ளன. இந்த இரு அணி­களில் எந்த அணி செல்­வாக்குப் பெற்­ற­தாக இருக்கும் என்­பது மக்­களின் கைக­க­ளில்தான் உள்­ளன. முன்னாள் செய­லாளர் நாய­க­மா­க­மான எம்.ரி.ஹஸன்­அலி ஆர்ப்­பாட்­ட­மில்­லாத அமை­தி­யான போக்­கை­யு­டை­யவர்.



கட்­சியின் ஆரம்பகால உறுப்­பி­னர்­களில் முக்­கி­ய­மா­னவர். கட்­சியின் பொரு­ளாளர் பத­வியை அஷ்­ரபின் காலத்தில் வகித்­தவர்.

இவ­ருக்கும் ரவூப் ஹக்­கீ­முக்­கு­மி­டையே 2007 ஆம் ஆண்டு முதல் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆயினும், கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஹஸன்­அ­லிக்கு தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்­டமை, அத்­தேர்­தலின் பின்னர் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி மறுக்­கப்­பட்­டமை, செய­லாளர் நாயகம் பத­வியின் அதி­கா­ரங்­களை குறைத்­தமை, 27 ஆவது பேராளர் மாநாட்­டிற்கு முன்­ன­தாக நடை­பெற்ற உயர்­பீடக் கூட்­டத்தில் ஹஸன்­அ­லிக்கு செய­லாளர் பதவி வழங்­கப்­ப­டாமை, கட்­சியின் யாப்பில் செய்­யப்­பட்ட மாற்­றங்கள் ஆகி­யன கார­ண­மாக ரவூப் ஹக்­கீ­முக்கும், ஹஸன்­அ­லிக்­கு­மி­டையே ஏற்­பட்ட முரண்­பா­டுகள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன. 
ஹஸன்­அலி அணியின் பலம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் பல முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. அந்த முரண்­பாட்டில் ஈடு­பட்­ட­வர்கள் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து சென்று தனிக் கட்­சி­களை ஆரம்­பித்­தார்கள். இது போலவே ஹஸன்­ அ­லியின் அணி­யி­னரும் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து செல்­லு­வார்கள் என்று ரவூப் ஹக்கீம் எண்ணிக் கொண்டார்.

ஆனால், கட்­சியில் பல பிள­வு­களை கண்ட ஹஸன்­அலி கட்­சிக்கும் தமக்கும் இருக்­கின்ற இறுக்­க­மான விசு­வா­சத்­தினால் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து செல்­ல­வில்லை. பிரிந்து செல்­வது தமக்கு பல­வீ­னத்­தையும், ரவூப் ஹக்­கீ­முக்கு பலத்­தையும் கொடுக்­கு­மென்று கணித்துக் கொண்ட ஹஸன்­அலி அணி­யினர் கட்­சிக்குள் இருந்து கொண்டே போராட்­டங்­களைச் செய்­வ­தற்கு எண்­ணி­யுள்­ளார்கள்.

இவர்­களின் இந்த முடி­வுதான் ரவூப் ஹக்­கீ­முக்கு இருக்­கின்ற மிகப் பெரிய சவா­லாகும். ஹஸன்­ அ­லியின் அணி­யி­னரை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கினால் அவர்கள் இன்னும் பல­ம­டை­வார்கள். ஏனெனில், ஹஸன்­அ­லி­யையோ, அவ­ரோடு நிற்­கின்ற உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளையோ கட்­சி­யி­லி­ருந்து நீக்­கினால் அது அவர்­க­ளுக்கு செய்­யப்­பட்ட மற்­று­மொரு அநி­யா­ய­மா­கவே கணிக்­கப்­படும். ஹஸன்­அ­லிக்கு அநியாயம் செய்­யப்­பட்­டுள்­ள­தென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்­களில் பலர் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக கருத்­துக்­களை முன்வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஹஸன்­அலி, கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மி­னாலும், அவ­ரது அணி­யி­ன­ராலும் செய்­யப்­பட்ட அநீ­தி­களை மக்கள் முன் சொல்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளார். கிழக்கு மாகா­ணத்தில் உள்ள ஊர்­க­ளுக்கு சென்று கூட்­டங்­களை நடாத்­து­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளார். இதற்­க­மை­வாக தமது சொந்த ஊரான நிந்­த­வூரில் ஹஸன்­அலி கடந்த 03.03.2017 வெள்ளிக் கிழமை 'மர­வேர்­க­ளுக்கு விளம்பல்' எனும் தொனிப் பொருளில் மாபெரும் பொதுக் கூட்­ட­மொன்­றினை நடாத்­தினார்.

நிந்­தவூர் பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் எம்.ஏ.எம்.தாஹிர் (அஸ்ரப்) தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்­தில் பெருந் தொகை­யான பொதுமக்கள் கலந்து கொண்­டார்கள். 

இக்­கூட்டம் இலங்­கையின் அர­சி­யலில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. ஹஸன்­அலி உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த போது பலர் கண்ணீர் சிந்திக் கொண்­டி­ருந்­தார்கள். அவர்கள் உணர்ச்சிப் பிர­வா­கத்தில் மூழ்­கி­யி­ருந்­தார்கள். தங்­களின் கண்­ணீ­ராலும், துஆக்­க­ளி­னாலும், உதி­ரத்­தாலும் வளர்க்­கப்­பட்ட கட்­சியை கழு­குகள் கொத்திக் கொண்­டி­ருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யாது. கட்­சியை காப்­பாற்ற வேண்­டு­மென்­பதில் ஆர்வங் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், ஹஸன்­அ­லிக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  

ஹஸன்­அ­லிக்­கு­ரிய மதிப்பும், மரி­யா­தையும் அதி­க­ரித்­துள்­ளது. அவ­ரோடு அதி­க­மான உயர்­பீட உறுப்­பி­னர்கள் இல்­லாத போதிலும், ஆத­ர­வா­ளர்­களில் பலர் அவரின் பக்கம் உள்­ளதால் அதுவே அவரின் பல­மாகும்.
தலைவர் மாற்­றப்­பட வேண்டும்
கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு மாற்­ற­மாக கட்சி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், ரவூப் ஹக்கீம் அதி­கா­ரங்கள் அனைத்­தையும் வைத்துக் கொண்டு சர்­வ­தி­காரி போன்றும், முஸ்லிம் சமூ­கத்தின் மீது அக்­க­றை­யற்­ற­வ­ரா­கவும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்றார் என்­றெல்லாம் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை ஹஸன்­அலி முன் வைத்தார். மடை திரண்ட வெள்ளம் போல் அணி திரண்டு இருந்த மக்கள் முன் இவ்­வாறு உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த ஹஸன்­அலி ஒரு கட்­டத்தில் ''இக்­கூட்டம் கட்­சியின் தலை­வரை மாற்­று­வ­தற்­கான கூட்­ட­மல்ல. அவர் திருந்த வேண்டும்'' என்ற போது அங்கு வந்­தி­ருந்த ஆத­ர­வா­ளர்கள் ''கட்­சியின் தலை­வ­ராக ரவூப் ஹக்கீம் இருக்க முடி­யாது. அவரை மாற்ற வேண்டும்'' என்று சத்தம் போட்­டார்கள். மேடையின் அருகில் திரண்டு வந்து ''ஹஸன்­அலி சேர் உங்கள் வாயால் சொல்­லுங்கள் அவரை மாற்ற வேண்­டு­மென்று'' என கேட்­டார்கள். இதனால், சுமார் 10 நிமி­டங்கள் கூட்­டத்தில் குழப்ப நிலை காணப்­பட்­டது. இதனால், ''அது உங்­களின் கைக­ளில்தான் உள்­ள­து'' என்று சொன்னபோது ''அல்­லாஹு அக்பர்'' என்று தக்பீர் முழங்­கி­னார்கள்.

மக்­களின் இந்த உணர்ச்சி ரவூப் ஹக்கீம் மீதுள்ள வெறுப்பைக் காட்­டு­வ­தா­க­வுள்­ளது. 
நாக­ரி­க­மான பேச்சு
ஹஸன்­அலி கட்­சியின் இன்­றைய நிலை பற்­றியும், அதற்­கு­ரிய கார­ணங்­க­ளையும் மிகவும் நிதா­ன­மா­கவும், நாக­ரி­க­மா­கவும் முன்வைத்தார். இவரின் இந்த அணுகு முறை பல­ரையும் ஈர்த்­துள்­ளது. பலரை அவர் குற்றம்சாட்­டிய போதிலும் யாரு­டைய பெய­ரையும் சொல்­ல­வில்லை.

அவர்­களின் பெயர்­களைச் கூறுங்கள் என்று ஆத­ர­வா­ளர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் அவர் அவர்­களின் பெயர்­களை சுட்­டிக்­காட்­ட­வில்லை. ''கட்­சியை தூய்­மைப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அதற்கு உங்­களின் ஆத­ரவு வேண்டும். எனது மூச்­சுள்ள வரை கட்­சியை பாது­காத்துக் கொள்­வ­தற்கு உழைக்­க­வுள்ளேன்.

இதற்கு கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் பூரண ஒத்­து­ழைப்புத் தர வேண்­டும்'' என்றும் கேட்டுக் கொண்டார். தனக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. ஏமாற்­றப்­பட்­டுள்­ளளேன் என்­றி­ருந்த போதிலும் அவர் நிதானம் இழக்­க­வில்லை. பொறு­மை­யுடன் கருத்­துக்­களை முன் வைத்தார்.
ரவூப் ஹக்­கீமின் கூட்டம்
இதேவேளை, மறுநாள் 04.03.2017 சனிக்­கி­ழமை நிந்­தவூர் பிர­தேச சபையின்; முன்­றலில் கூட்­ட­மொன்று நடை­பெற்­றது. ஹஸன்­அ­லியின் சகோ­த­ரரும், நிந்­தவூர் பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எம்.ரி.ஜப்பார் அலியின் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் கலந்து கொண்ட பொது மக்­களின் தொகை ஒப்பீட்டளவில் குறை­வாகும். 

ஹஸன்­அ­லியின் கூட்­டத்திற் கலந்து கொண்­ட­வர்­களில் பெரும்­பான்­மை­யினர் மாற்று அணி­யினர் என ரவூப் ஹக்கீம் அணி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அப்­ப­டி­யாயின் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்ட கூட்­டத்­திற்கு மிகக் குறைந்த பொது மக்­களே கலந்து கொண்­டார்கள். ஏன் பெருந்தொகை­யான கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் ரவூப் ஹக்­கீமின் கூட்­டத்­திற்கு வர­வில்லை. கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் முஸ்லிம் காங்­கி­ரஸின் இன்­றைய பிற்­போக்குத் தனத்தை ஏற்றுக் கொள்­ளா­மை­யால்தான் ஆத­ர­வா­ளர்கள் வருகை தர­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

ஹஸன்­அ­லியின் கூட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்­களில் பெருந் தொகை­யினர் மாற்றுக் கட்­சி­யினர்  என்றால் அம்­பாரை மாவட்­டத்தில் மாற்றுக் கட்­சி­களின் செல்­வாக்கு அதி­க­ரித்­துள்­ளது என்றும் சொல்­லலாம். ஹஸன்­அ­லியின் கூட்­டத்தில் பெரும்­தொ­கை­யான பொது­மக்கள் கலந்து கொண்­ட­மையை குறைத்து மதிப்­பிட முடி­யாது. 

மேலும், ஹஸன்­அ­லியின் கூட்­டத்­திற்கு வருகை தந்த பொதுமக்­களின் உணர்ச்­சியைப் பார்க்கும் போது அவர்­களில் பெரும்­பான்­மை­யினர் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வா­ளர்கள் என்­பது நிஜ­மாகும். உள்­ளத்தால் இணைந்­தால்தான் உணர்ச்­சியும் ஏற்­படும். கூடவே கண்­ணீரும் கசியும். இவற்றை ஹஸன்­அ­லியின் கூட்­டத்தில் அவ­தா­னிக்க முடிந்­தது.

பேச்­சுக்­களும், விமர்­ச­னங்­களும்    
ஹஸன்­அலி பேசு­கையில் மிகவும் நாக­ரி­க­மா­கவும், ஆதா­ரங்­க­ளு­டனும் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்தார். ரவூப் ஹக்­கீமை அடிக்­கடி தலைவர் என்று விழித்துக் கொண்டார்.

இதனை அங்கு வருகை தந்த ஆத­ர­வா­ளர்கள் முகம் சுழித்துக் கொண்டே கேட்டுக் கொண்­டி­ருந்­தார்கள். தலைவர் திருந்த வேண்­டு­மென்றும், அவரை மாற்றும் கூட்­ட­மல்ல இது­வென்றும்  ஹஸன்­அலி தெரி­வித்த போது, அவர் திருந்த மாட்டார். அவரை மாற்ற வேண்­டு­மென்று ஆத­ர­வா­ளர்கள் சத்­த­மிட்­டமை உச்சக் கட்டம் எனலாம்.

இதேவேளை, ஹஸன்­அலி ரவூப் ஹக்கீம் கட்­சியின் தலை­வ­ராக தொடர்ந்தால், கட்­சிக்குள் இன்னும் முரண்­பா­டுகள் ஏற்­ப­டவும், செல்­வாக்கில் வீழ்ச்சி ஏற்­ப­ட­வுமே வாய்ப்­புக்கள் உள்­ளன. இதனை அம்­பாரை மாவட்­டத்தில் உள்ள பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்­களின் கருத்­துக்­களின் மூலம் மிகவும் தெளி­வாக உணர்ந்து கொள்ளக் முடி­கின்­றன.

இக்­கூட்­டத்தில் பேசி­ய­வர்கள் பேச்­சுக்­களில் நாக­ரி­கத்தை காண முடி­ய­வில்லை. சண்­டி­யர்கள் போலவே பேசிக் கொண்­டார்கள். என்­னிடம் சொன்னால் ஹஸன்­அ­லியின் கூட்­டத்தை தடுத்­தி­ருப்பேன் என்று கிழக்கு மாகாண சபையின் சுகா­தார அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். இதே வேளை, பிரதி சுகா­தார அமைச்சர் பைசால் காசிம் தான் முயல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட போது காட்­டிய சண்­டித்­த­னத்தை ஞாபகப்­ப­டுத்­தினார். 

ரவூப் ஹக்கீம் பேசு­கையில் ஹஸன்­ அ­லியின் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. பதி­ல­ளிக்க முடி­யா­மையை மூடி மறைப்­ப­தற்கு மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் இக்­கட்­சியை குரு­ட­ரா­கவும், செவி­ட­ரா­கவும் இல்­லாமல் வழி நடாத்திக் கொண்டு போக முடி­யா­தென்று சொல்­லி­யுள்ளார். அதனால், இவற்றை எல்லாம் நான் கண்டு கொள்­வ­தில்லை என்று ரவூப் ஹக்கீம் தெரி­வித்துக் கொண்டார். இதற்கு மேடையில் இருந்­த­வர்கள் கைதட்­டி­னார்கள்.

நீதிக்கும், தர்­மத்­திற்கும் மாற்­ற­மான விமர்­ச­னங்­களை கேட்­பதில் செவி­ட­ரா­கவும், கெட்ட விட­யங்­களை பார்ப்­பதில் குரு­ட­ரா­கவும் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­காவே இதனைச் சொன்னார்.

இத­னையே அல்­லாஹ்வும் சொல்­லு­கின்றான். அக்­கா­லத்தில் அஸ்ரப் இந்திய அர­சாங்­கத்­திடம் பணம் பெற்றுக் கொண்­ட­தா­கவும், வெளி­நாட்டில் அப்பில் தோட்டம் இருப்­ப­தா­கவும் ஐ.தே.கவினர் குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­தார்கள்.

இது போன்று பல குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­தார்கள். இவற்­றுக்கு பதி­ல­ளித்து கட்­சியின் கொள்­கை­களை சொல்­லு­வ­தற்­கான காலத்தை வீண­டிக்கக் கூடா­தென்­ப­தற்­கா­கவே கட்­சியை குரு­ட­ரா­கவும், செவி­ட­ரா­கவும் இல்­லாமல் வழி நடாத்திக் கொண்டு போக முடி­யா­தென்று மர்ஹூம் அஸ்ரப் சொன்னார். இன்று கட்­சியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் கட்­சியின் சொத்­துக்கள் பற்­றிய பிரச்­சினை, கொள்­கையில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்கள், வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்­காமல் இருக்­கின்­ற­மை­க­ளுக்­காக அஸ்­ரப்பின் வார்த்­தை­களை தமக்­கேற்­ற­வாறு பயன்­ப­டுத்திக் கொள்­வது மிகப் பெரிய ஏமாற்று நட­வ­டிக்­கை­யாகும்.

மேலும், குரு­ட­ரா­கவும், செவி­ட­ரா­கவும் இல்­லாமல் வழி நடாத்திக் கொண்டு போக முடி­யா­தென்று சொல்லிக் கொண்டு அஸ்­ரப்பின் வார்த்­தை­க­ளுக்குள் ஒளிந்து கொள்ளும் ரவூப் ஹக்கீம், கட்­சியின் யாப்பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது எதற்­காக. அஸ்­ரப்பின் வார்த்­தை­களில் நம்­பிக்­கையை வெளிப்­ப­டுத்தும் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் அஸ்­ரப்பின் யாப்பில் நம்­பிக்கை வைக்­காது அதில் குறை­களை கண்டு கொண்­டமை, செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களை குறைத்து அதனை பொம்­மை­யாக்­கி­யமை, வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமை, தலை­வ­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களை இன்னும் அதி­க­ரித்துக் கொண்­டமை யாவும் தமது தலைவர் பத­வியை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­கா­க­வே­யாகும்.

அஸ்­ரப்பின் கொள்­கை­களை மாற்­றி­ய­மைத்து தாம் நினைக்கும் கருத்தை மக்கள் முன் திணிக்க முற்­ப­டு­வது முஸ்­லிம்­களை இன்னும் பல வரு­டங்­க­ளுக்கு தமது இஷ்­டத்­திற்கு ஆட்டி வைக்­க­லா­மென்று ரவூப் ஹக்கீம் எண்­ணு­வ­தா­கவே உள்­ளது. 
பிரம்பு எடுத்தல் 
முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 

அவற்­றிக்கு இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதா­ர­பூர்­வ­மான பதில்கள் அளிக்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் அவர் நிந்­த­வூரில் நடை­பெற்ற கூட்­டத்தில் ''நான் பிரம்பு எடுத்தால் கட்­சியில் ஒருத்­தரும் இருக்­க­மாட்­டார்கள்'' எனத் தெரி­வித்தார். குற்றம் புரி­கின்­ற­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே பிரம்பு எடுக்­கப்­படும். பிரம்பு எடுத்தால் ஒருத்­தரும் கட்­சியில் இருக்­க­மாட்­டார்கள் என்றால் எல்­லோரும் குற்றம் புரிந்­த­வர்கள் என்­ப­தனை மறை­மு­க­மாக ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். மட்­டு­மல்­லாது தான் மட்டும் குற்றம் புரி­யா­தவர் என்­ப­த­னையும் சொல்­லி­யுள்ளார். குற்­ற­வா­ளி­களின் தலை­வ­ரா­கவே ரவூப் ஹக்கீம் உள்­ளா­ரென்­ப­தனை அவரின் கருத்­துக்கள் நிரு­பித்­துள்­ளன.

மேலும், கட்­சியில் தமது நிலையை ஒரு உதா­ர­ணத்­துடன் சொல்லிக் காட்­டினார். அதா­வது ''மாடுகள் கட்டும் இடத்தில் நடுவில் நடப்­பட்­டுள்ள கம்பம் போன்று நான் இருக்கிறேன், அதில் மாடுகள் சொறிந்து கொள்­வ­தற்­காக அடிக்­கடி வந்து கம்­பத்தை உராய்ந்து கொண்டும், முட்டிக் கொண்டும் இருக்கும். அந்த கம்­பத்தைப் போல் நான் பொறு­மை­யாக இருக்கிறேன்'' என அவர் தெரி­வித்தார்.

ரவூப் ஹக்கீம் கம்பம் என்றால், அதில் உராய்­கின்­ற­வர்கள், முட்­டு­கின்­ற­வர்கள் உயர்பீட உறுப்பினர்களாகத்தான் இருக்க வேண்டும.

ஆயினும், உங்களை மாடுகள் என்று நான் சொல்லவில்லை என்றும் தெரிவித்துக் கொண்டார். ரவூப் ஹக்கீமின் இந்த உவமானம் மக்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. அண்மைக்காலமாக ரவூப் ஹக்கீமின் கருத்துக்கள் இவ்வாறு பொருத்தப்பாடு இல்லாத வகையில் கையாளப்பட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றன. இதன் மூலம் அவர் அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளார் என்று புரிகின்றது. 

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கட்சி தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாக கட்சியின் ஆதரவாளர்கள் பிரம்பு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சிரிப்பு 
ரவூப் ஹக்கீம் யாருக்கு சொல்லுகின்றார் என்பதனைப் புரிந்து கொள்ளாமல் சிரிக்கின்றவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளார்கள். இதனை பல மேடைகளில் கண்டுள்ளோம். நிந்தவூரிலும் கண்டு கொண்டோம். ரவூப் ஹக்கீம் கம்பத்தை முட்டும் மாடுகள் என்ற கதையையும், பிரம்பு எடுக்கும் கதையையும் சொன்ன போது மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

மேடையில் உள்ளவர்களையும் சேர்த்துத்தான் அவர் அக்கதைகளைச் சொன்னார். வெட்கப்பட வேண்டிய இடத்தில் சிரிப்பது புரியாதவர்களின் செயலாகும். எதனையும் புரிந்து கொள்ளாதவர்கள் உள்ள இடத்தில் அவர்களைப் புரிந்து கொண்டவர் தலைவராக இருப்பது அதிசயமில்லை. 

-நன்றி - விடிவெள்ளி
Previous Post Next Post