Top News

கருமலையூற்றை முஸ்லிம்களிடமிருந்து சுவீகரித்தது அரசாங்கம்!


சிலோன் முஸ்லிம் விசேட செய்தியாளர்

கருமலையூற்று பள்ளிவாசல் அமைந்துள்ள காணி உட்பட அப் பகுதியை இராணுவத்தின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் இரகசியமாக சுவீகரித்துள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பில் நேற்று வியாழக் கிழமை பாராளுமன்றில் உரை நிகழ்த்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கண்டனத்தை வெளியிட்டதுடன் அரசாங்கம் உடனடியாக இந்த நிலத்தை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கருமலையூற்று பள்ளிவாசலை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் இடித்துத்தள்ளியிருந்த நிலையில் புதிய அரசாங்கம் அக் காணியை முஸ்லிம்களிடம் மீள ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் அதைவிட சற்றுமேல் சென்று அப் பகுதியை இரகசியமாக சுவீகரித்து இராணுவத்திற்கு வழங்கியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

1942 ஆண்டு கட்டப்பட்ட கருமலையூற்று பள்ளிவாசல்இ மீனவர்களாலும் அந்த ஊர் மக்களாலும் தொடர்ந்து பாவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பிரதேசம் இராணுவப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டதால் கடந்த சில வருடங்களாக சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையிலேயே தற்போது முற்றாக சுவீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post