Headlines
Loading...
இலங்கை பொலிஸ் தினத்திற்கு காரணமான முஸ்லிம் வீரரின் தியாகம் பற்றிய பதிவு

இலங்கை பொலிஸ் தினத்திற்கு காரணமான முஸ்லிம் வீரரின் தியாகம் பற்றிய பதிவு





சிலோன் முஸ்லிம் அலுவலக செய்தியாளர்

இன்று தேசிய பொலிஸ் தினமாகும். வருடாந்தம் இலங்கையில் தேசிய பொலிஸ் தினம் மார்ச் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

இலங்கையின் பொலிஸ் துறையில் முதலாவது வீரர் சேவையின்போது தனது உயிரைத் தியாகம் செய்தததைக் குறிக்கும் வகையிலேயே இத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மலே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அவரது பெயர் துவான் ஷபான் என்பதாகும்.

1864 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி மாவனல்லை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரைக் கைது செய்யச் சென்ற வேளை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இவர் உயிரிழந்தார். 

இதன்படி இலங்கை பொலிஸ் சேவையில் முதலாவது உயிர்நீத்தவர் இவரேயாவார்.

இது இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.