Top News

நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப் பட்டது மதுபான உற்பத்தி சாலை



பாறுக் றியாஸ்

போதையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையோடு இன்று ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த கல்குடா மதுபான உற்பத்தி சாலை ... 

எமது இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக  மதுபான  கடைகள் பல அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டு வருகிறது .. 

அது அவ்வாறு இருக்க கல்குடா பிரதேசத்திலே மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி நிலையம் பாரிய அரசியல் பின்னணியில் தற்போது நிர்மானப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.. 

இந்த மதுபான தொழிற்சாலை தொடர்பாக மாகாண முதலமைச்சருக்கு எந்த விதமான அறிவித்தலும் இன்றி கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாம்.. மேலும் இதற்கான அனுமதி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளதாம் .. ஆனால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கூறுகையில்  எங்களுக்கு  இது தொடர்பான எந்த விதமான விடயங்களும் தெரியாது என்று குறிப்பிடுகின்றனர் .

ஒரு சாதாரண பொது அமைப்புகளின் கட்டடங்கள் அமைப்பதென்றாலே எவ்வளவு நிறுவாக சிக்கல் உள்ளது .. ஆனால் இந்த மாபெரும் மதுபான தொழிற்சாலை கட்டுமானப் பணியானது அரசாங்க அதிகாரிகளுக்கோ , அல்லது முதலமைச்சருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தெரியாது என்பதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ..

மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு நடைமுறைப் படுத்துவதற்காகத்தான் உங்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளனர் ...

ஒருவர் ஒரு நன்மையான விடயத்தினை செய்தால் அவர் இறந்த பின்னும் அது அவருடைய மண்ணரை வாழ்க்கைக்கு நன்மைகளை தேடித்தரும் ..
இவ்வாறான கேவலம் கெட்ட தீமைகளை செய்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்குபவர்கள் இறைவனையும் மறுமை வாழ்வினையும்  அஞ்சிக்கொள்ள வேண்டும் ..

தமிழ் முஸ்லிம்கள் செரிந்து வாழ்கின்ற இந்த கல்குடா பிரதேசத்திலே இந்த மது உற்பத்திசாலை  ஒரு பொறுத்தமற்ற திட்டமாகும் . ஆகவே இந் நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக இந்த  மது உற்பத்திசாலையை  தடை செய்ய வேண்டும் ..

அல்லது பொதுமக்கள் , கல்குடா உலமா சபை , கோவில் பரிபாலன சபைகள் , சிவில் அமைப்புகள் , அரசியல்வாதிகள் , மற்றும் சமூக நலன் விரும்பிகள் அனைவரும்  இந்த கேடுகெட்ட திட்டத்திற்கு எதிராக அணிதிரண்டு இதனை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் ... 

ஒற்றுமையே எமது பலம்
Previous Post Next Post