Top News

கிண்ணியாவில் டெங்கு பரவல் சுகாதார அமைச்சருக்கு முஸ்லிம் கவுன்ஸில் கடிதம்



திருகோணமலை மாவட்ட கிண்ணியாப் குதியில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய்தொடர்பில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம்கவுன்ஸில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் செவ்வாயன்று வேண்டுகோள்விடுத்தது.

விசேட கடிதமொன்றின் மூலம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்அமீன் ந்தவேண்டுகோளை விடுத்தார்.

கடந்த சில நாட்களுக்குள் 13 பேர் இந்த பரவிவரும் காய்ச்சல் நோயினால்உயிரிழந்துள்ளனர்இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்இதனால்அப்பிரதேசத்தைஅனர்த்தப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்எனவும் அவர் அக்கடிதத்தில் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு தேவையானஉடனடி வைத்திய ஆளணியினரையும்மருந்து வசதிகளையும் கொழும்பிலிருந்துஅனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

நீங்கள் முன்னெடுக்கும் அவசர நடவடிக்கைகளுக்கு தங்களது மேலான ன்றிகளையும்உங்களுக்கு எமது அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அவர்அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
Previous Post Next Post