வில்பத்து
தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல்,
மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகியபகுதிகள்
இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி
அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் முஸ்லிம்
சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
முஸ்லிம்
சிவில் அமைப்புகள் கொழும்பு ரமடா ஹோட்டலில் இன்று வியாழன் மாலை ஏற்பாடு
செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த
24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ரஷ்ய பயணத்தின் போது
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டிருந்தார். இந்த வர்த்தமானி
அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் அரசாங்கத்தினால்
சுவீகரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. இந் நிலையிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தனை இரத்துச் செய்யுமாறு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.