Top News

கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்தப்படல் வேண்டும்: இம்ரான் எம்.பி


கிண்ணியா வைத்தியசாலை தரமுயர்தப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.திருகோணமலையில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சபைக்கு தலைமை தாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே பொருளாதாரம் சம்மந்தமான பிரேரணை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எனக்கு கிடைத்திருக்கும் இந்த ஐந்து நிமிடங்களை  எனது மாவட்டத்துக்காகவும் எனது மக்களுக்காகவும் எனது மாவட்ட்டமும் மக்களும் தற்போது எதிர்நோக்குகின்ற முக்கிய பிரட்சினை சம்மந்தமாக பேசுவதற்கு பயன்படுத்துகிறேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் .
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டெங்கு என்று சொல்கின்ற கொடூர நோய் ஒட்டுமொத்தமாக எங்களது பிரதேசத்தை எங்களது மாவட்டத்தை ஆட்டிப்படைக்கின்ற இந்த நேரத்த்கிலே திருகோணமலை மாவட்டத்தைப் பொருத்தவரையிலும் சுமார் 2500 க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ள நிலையில் கிண்ணியாவில் 12 பேரும் திருகோணமலையில் 2 பேரும் தோப்பூரில் 2 பேரும் மொத்தமாக 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நோயைப் பொறுத்தவரை எவ்வாறு இந்நோய் இப்பிரதேசங்களில் தீவிரமாக பரவியது இதை எவ்வாறு கட்டுப்படுத்தமுடியும் என்பதை நாம் ஆராயவேண்டியுள்ளது.
குறிப்பாக 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆண்டு வரையான காலப்பகுதியை நாம் எடுத்துப்பார்க்கும் போது 2013 இல் 2   2014 இல் 3 பேரும் மரணமடைந்துள்ளனர்.  ஆனால் 2017 இல் இந்த மூன்று மாதங்களுக்குள் 16 பேரை கொல்லுகின்ற இந்த டெங்கு நோயின் தாக்கத்தை மிகவும் அவதானத்துடன் நாம் பார்க்கவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
மேலும் திருகோணமலையை பிரதிநிதித்துவ படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் இங்கு சிலருக்கு நன்றி கூற வேண்டும் இந்த நோய் தீவிரமாக பரவுகின்ற வேளையில் எங்களது ஜனாதிபதி மற்றும் பிரதமரின்   கவனத்துக்கு நான்  கொண்டுவந்த வேளை அவர்களின் செயற்பாடுகளால் இன்று இந்த நோய் ஓரளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் முப்படையினர் விளையாட்டு கழகங்கள் சிவில் அமைப்புக்கள் மற்றும் தொண்டர்களின்  இச் சிரமதானப் பணிகளால் நிலைமை ஓரளவுக்கு கட்டுபடுத்தப்பட்டாலும் மேலும் சில முயற்சிகளை மேற்கொண்டு இதை முற்றுமுழுதாக தடுக்க வேண்டும்.
அத்துடன் கிண்ணியா வைத்தியசாலையில் பாரிய குறைபாடுகள் நிலவுவதனால் ஒரு கட்டிலில் மூன்று நான்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவது மட்டுமல்லாமல் கீழே பாய் விரித்து தங்கி சிகிச்சை பெறும் அவலநிலையும் காணப்படுகிறது. இதற்கான நிரந்தர தீர்வுகள் உடனடியாக காணப்படல் வேண்டும். ஏனென்றால் இதுவரை டெங்கு நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிகள் போதியளவு ஓய்பு எடுப்பது மூலம்தான் இந்நோயை குணப்படுத்த முடியும் என்று கூறப்படும் வேளையில் அந் நோயாளிகளுக்கான தகுந்த ஓய்வை வழங்க கூடியதாக இடப்பற்றாக்குறையற்ற வைத்தியசாலையாக இது மாற்றப்படல் வேண்டும்.
அத்தோடு எமது வைத்திய சாலை அபிவிருத்திக்குழு வைத்தியசாலைக்கு தேவைப்படும் உதவிகளை பெற்றுதறக்கோறி கோரிக்கை விடுத்துள்ளனர். அதுசம்மந்தமான விடயங்களை ஹென்சாட்டில் பதிவிடுமாறு கௌரவ உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கிறேன். மேலும் இவ் டெங்கு நோய் எவாறு திருகோணமலையில்  பாதிப்பை ஏற்படுத்தியது என்ற சகல தரவுகளுடன் கூடிய கடிதம் என்னிடமுள்ளது அதையும் ஹென்சாட்டில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டெங்கு நோயால் மரணமடைந்த பெரும்பாலானோர் கூலி வேலை செய்யும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் ஆகவே அவர்களுக்கான நஷ்டஈடு வழங்க ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அத்தோடு இந்நோய் கிண்ணியா பிரதேசத்தில் அதிக தாகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே இங்கு விசேட செயல்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அத்தோடு சுமார் 80000 மக்கள் தொகையை கொண்ட கிண்ணியாவுக்கு பொருத்தமான வைத்தியசாலை ஒன்று இல்லை. தற்போது காணப்படும் வைத்தியசாலையும் சிறிய பரப்பொன்றில் காணபடுகிறது. ஆகவே இவ்வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோடு இவ்வைத்தியசாலையை தரமுயத்த ஜனாதிபதி பிரதமர் சுகாதார அமைச்சர் ஆகியோர் நடவைக்கை எடுக்க வேண்டும்.
இந்நோயை கட்டுபடுத்தும் நோக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்றும் வைத்தியர்கள், தாதிகள், சிற்றூழியர்களுக்கு இவ்விடத்தில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Previous Post Next Post