Top News

ஹிஜாப் ஆடையை தயாரிக்கும் NIKE



முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.

விளையாட்டு வீராங்கனைகளுக்கான இந்த ஹிஜாப் ஆடை , பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக்கப்பட்டதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு      சௌகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் குறைந்த அளவிலான எடையுடனே இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நைக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இந்த ஹிஜாப் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் நைக் நிறுவனம் கூறியுள்ளது.
Previous Post Next Post