ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் சட்டக் கல்லூரிக்கு watter cooler வழங்கி வைப்பு

NEWS
இலங்கை சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் சட்டக்கல்லூரிக்கு நீர் குளிர்விப்பான் (watter cooler ) இயந்திரம் ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் சார்பில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் அதனை சட்டக்கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திரா எஸ். சமரசிங்கவிடம் கையளித்தார்.
சட்டக்கல்லூரிக்கு watter cooler  ஒன்றினைப் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிட்ட சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ், இது தொடர்பில் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதனை அடுத்து இத்திட்டத்துக்கு தேவையான நிதியினை ஹிரா பௌண்டேஷன் ஊடாக இராஜாங்க அமைச்சர் வழங்கி வைத்தார். 
இந்நிலையில், கொள்வணவு செய்யப்பட்ட watter cooler  உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் சபீனா சப்றாஸ் உள்ளிட்ட மஜ்லிஸ் உறுப்பினர்களது பங்குபற்றலுடன் நேற்று புதன்கிழமை நடைபெற்றமைக் குறிப்பிடத்தக்கது. 
(R.Hassan)
6/grid1/Political
To Top