Top News

தீவிரவாதத் தாக்குதல் : ஹுஜி தீவிரவாத குழுவின் 03 பேருக்கு மரண தண்டனை


தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் ஹுஜி தீவிரவாத குழுவின் தலைவர் மற்றும் அவரது 2 ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை வங்கதேச உச்ச நீதிமன்றம்  உறுதி செய்திருந்த நிலையில் அவர்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

சில்ஹெட் நகரில் உள்ள ஒரு தர்கா மீது கடந்த 2004-ம் ஆண்டு தீவிரவாதிகள் கிரைனைட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்போது வங்கதேசத்துக்கான பிரிட்டன் தூதராக இருந்த அன்வர் சவுத்ரி நூலிழையில் உயிர் தப்பினார். எனினும், இதில் 3 போலீஸார் கொல்லப்பட்டனர்.மேலும் 70 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சில்ஹெட் மண்டல விரைவு விசாரணை நீதிமன்றம், ஹர்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி (ஹூஜி) தலைவர் முப்தி அப்துல் ஹன்னான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு கடந்த 2008-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. 

இந்த நிலையில் அவர்களுக்கு இன்று துக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post