சிரிய எதிரணியினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் நகரங்கள் இரண்டிலிருந்து வெளியேறும் மக்களைக் காவிச் செல்லும் பஸ்களுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வெடிப்புத் தாக்குதலொன்றில், குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கத்துக்கும் எதிரணியினருக்குமிடையே எட்டப்பட்ட இணக்கம் ஒன்றுக்கு கீழே, இட்லிப் மாகாணத்திலுள்ள, எதிரணியின் முற்றுகைக்குள் காணப்படும் நகரங்களான புவா, கெப்ரயாவிலிருந்து வெளியேறுவோரை இலக்கு வைத்தே, அலெப்போவுக்கு மேற்காக றஷிடின்னில் (15) இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அரச தொலைக்காட்சியின் அறிக்கையொன்றில், இந்த வெடிப்பில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியேறிய 98 பேர் உள்ளடங்கலாக 112 பேர் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது. கொல்லப்பட்டோரில் பெரும்பாலோனோர் ஷியா முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னத்தினால் வெடிப்பு ஏற்படுத்தப்பட்டது என எந்தவோர் உறுதிப்படுத்தலும் இல்லாதபோதும், உதவிகளை வழங்கும் வானொன்றைப் பயன்படுத்தி, வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்குள் தற்கொலைக் குண்டுதாரி நுழைந்ததாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வாகனத்தின் மூலமே வெடிப்பு நிகழ்ந்ததாக கண்காணிப்பகம் கூறியுள்ளது.
Post a Comment