இலங்கை அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு உதவும் வகையில், 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (5 மில்லியன் குவைத் தினார்) மேலதிக கடனாக வழங்க குவைட் நாடு நடவடிக்கை எடுத்துள்ளது. குவைட் நாட்டிலுள்ள அரேபிய அபிவிருத்திக்கான குவைட் நிதியத்திலிருந்து (KFAED) இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.