Top News

1929 அழைத்து பொய் தகவல்களை வழங்க வேண்டாம்

1929 என்ற இலக்கத்திற்கு அழைத்து சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து போலியான தகவல்களை வழங்க வேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வேண்டுகோள்விடுத்துள்ளது.
குறித்த தொலைபேசிக்கு கிடைக்கும் முறைபாடுகளை ஆராய்ந்து பார்த்தால் அதில் கிடைப்பவை பொய்யான முறைபாடுகள் என்று தெரியவந்துள்ளதாக அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த செயலானது அரச அதிகாரிகளின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்பதுடன்,அரச நிதியை வீணாக்கும் செயல் என்றும் இவ்வாறு போலி முறைபாடுகளை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
1929 என்ற தொலைபேசி ஊடாக கடந்த வருடம் 9631 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும்,இதில் 2180 முறைபாடுகள் சிறுவர்களை கொடுமைகள் தொடர்பான முறைபாடுகள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நன்றிகள் live 360

Post a Comment

Previous Post Next Post