Top News

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் 25வது மாபெரும் விழாவும்,மலர் வெளியீடும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-02 ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 25வது மாபெரும் விழாவும், மலர் வெளியீடும் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக  ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் செயலாளர் கவிமணி. மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவில் கற்று உயர் நிலை அடைந்த ஐந்து உலமாக்கள் உட்பட மத்ரஸாவின் பழைய மாணவர்கள்,2016 டிசம்பர் இம்முறை அல்குர்ஆனை கற்று வெளியான மாணவர்கள் ஆகியோர் சான்றிதழும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,விழாவுக்கு உதவியவர்கள் உட்பட அதி உயர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டோர் பொன்னாடை போர்த்தி விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு இக் குர்ஆன் மத்ரஸாவில் 25 வருடத்தில் அல்குர்ஆனை கற்று வெளியான 1619 மாணவர்களின் பெயர் விபரம் அடங்கிய மலரும் பிரதம அதிதியினால் உத்தியோகபூர்வமாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

இதில் விஷேட அம்சமாக 25 வருடத்தில் 1619 மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாவதற்கு அயராது பாடுபட்ட ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம்.அஸார் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் பல்வேறு இஸ்லாமிய கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாணவர்கள்  அல்குர்ஆனை கற்று வெளியாகும் 25வது மாபெரும் விழாவில் சிரேஷ்ட சட்டத்தரணி  எம்.ஐ.எம்.அஸ்வர்,மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளன தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி), சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ,காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உஸனார் ஜேபி,டாக்டர் அலீமா உம்மா அப்துர் றஹ்மான்,உட்பட உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள்,மத்ரஸாவின் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Post a Comment

Previous Post Next Post