மீதொடமுல்ல அனர்த்தம் : பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

NEWS
0
மீதொடமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட இறப்புக்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் 12 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் 7 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் கொலன்னாவ, மீதொடமுல்ல குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 150 வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் 180 குடும்பங்களை சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் பலர் புதையுண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top