பாறுக் ஷிஹான்
காங்கேசன்துறைக்
கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 மியன்மார் அகதிகள்
கடற்படையினரால் இன்று(30) மதியம் மீட்கப்பட்டு காங்கேசந்துறைப்
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிறுவர்கள் தாய்மார்கள் வயோதிகர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மார்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்கள் காரணமான அங்கிருந்து வேறு
நாடுகளுக்கு கடல் வழியாக செல்வதற்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் காங்கேசந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
