Top News

33 இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்

சிரியா நாட்டில் செயல்பட்டு  வரும் ஐ.எஸ்.ஐ  தீவிரவாத அமைப்பினர், 33 இளைஞர்களை படுகொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
18 வயது முதல் 25 வயது மதிக்கத்தக்க 33 இளைஞர்களை ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள், கொடூரமாக கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளால் அந்த இளைஞர்களைப் படுகொலை செய்தது உறுதியாகியுள்ள போதிலும், அந்த இளைஞர்களின் அடையாளம் குறித்த முழு விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அவர்கள் சிரிய ராணுவ வீரர்களா அல்லது சிரியா அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையைச் சேர்ந்தவர்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றிகள் live360

Post a Comment

Previous Post Next Post