கடந்த ஆண்டு ஜுலை மாதம் அரசுக்கு எதிராக
துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ புரட்சிக்கு உதவிய 4000 இற்கும்
மேற்பட்ட அரச பணியாளர்கள் ஜனாதிபதி எர்டோகனால் பதவிநீக்கம்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களில் 1000 பேர் நீதித்துறை அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் என்றும்,ஏனையவர்கள் இராணுவம் மற்றும் விமானப்படை விமானிகள் என 100இற்கும் மேற்பட்டோர் அடங்குவதாகவும் துருக்கி தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை ஏற்கனவே 9 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
LIVE360