Top News

4100 வேலைத்திட்டங்களுக்கான 808 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!




புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட விசேட மீளாய்வுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளவுள்ள 4100 வேலைத்திட்டங்களுக்காக 808 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட், மீள்குடியேற்ற செயலகங்களுக்குரிய செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், மீள் குடியேற்ற புனர்வாழ்வு தொடர்பான மாவட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
இதன் போது 2016ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்ததுடன் இவ் வருடத்துக்கான (2017)  நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. 

இதன் போது குறிப்பிட்ட மீள் குடியேற்றத்திற்கு பொறுப்பான பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாகவும் அது தொடர்பாகவுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள தேக்க நிலை தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களிடம் கலந்துரையாடப்பட்ட போது, பிரதேச செயலாளரக்ள் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை இராஜாங்க அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து அதற்குறிய தீர்வுகள் காணப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபர் அதற்குரிய தேக்க நிலையை தீர்த்துக் கொடுக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை விடுத்தார்.

மேலும் இவ் வருடம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அதி கூடிய தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்கள் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்துக்கு முன் முடிவுருத்தப் பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்கள். இதன் போது இவ் வருடம் 4100 வேலைத்திட்டங்களுக்காக மொத்தமாக 808 மில்லியன் ரூபாய் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 404 மில்லியன் ரூபாவுக்கான ஆரம்ப நிதி ஒதுக்கீடு மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப்பெற்று இருப்பதாகவும் அதற்கான நிதியில் இருந்து 331.13 மில்லியன் ரூபாய் நிதியினை குறிப்பிட்ட பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் தெரிவித்தார். 

இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிட்ட நிதியினை இவ் வருடத்திற்குள் முழுமையாக செலவு செய்து அதற்குரிய திட்ட வரைவுகளும் முடிவுருத்தல் சம்பந்தமான சகல ஆவணங்களும் பிரதி இடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.




media unit of State Minister of Rehabilitation and Resettlement
R.Hassan
0112575907

Post a Comment

Previous Post Next Post