Headlines
Loading...
மறிச்சுக்கட்டி மக்களின் போராட்டம் 5ஆவது நாளாக தொடர்கிறது

மறிச்சுக்கட்டி மக்களின் போராட்டம் 5ஆவது நாளாக தொடர்கிறது

முசலி பிர­தே­சத்தின் சில கிரா­மங்­களை உள்­ளி­டக்கி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வர்த்­த­மா­னியில் வெளி­யிட்ட வனப்­பா­து­காப்பு பிர­க­ட­னத்­துக்கு எதி­ராக முசலி மக்­களால் முன்­னெ­டுக்­கப்­படும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 5 ஆவது நாளாக இன்றும் தொடர்­கி­றது.  

தமது பூர்­வீக நிலத்தை மீட்­டுத்­தர வேண்டும். அத்­துடன், ஜனா­தி­பதி தனது பிர­க­ட­னத்தை வாபஸ் பெற வேண்டும் உள்­ளிட்ட கோரிக்­கை­க­ளுடன் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மறிச்­சி­கட்டி, பாலைக்­குழி மற்றும் கர­டிக்­குழி ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கானோர் மறிச்­சிக்­கட்டி பள்­ளி­வா­ச­லுக்­கு ­முன்னால் சத்­தி­யாக்­கி­ர­கப் ­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தனர். இப் போராட்டம் இன்று சனிக் கிழமையும் 5 ஆவது நாளா தொடர்கின்றது.

குறித்த வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீள்பரிசீலனைக்குட்படுத்துவதாக அறிவித்துள்ள போதிலும் அந்த வர்த்தமானியை முற்றாக வாபஸ் பெறும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடரப் போவதாக மறிச்சுக்கட்டி மக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.