Top News

காத்தான்குடியில் ஒரே நாளில் 50 பேருக்கு டெங்கு இனங்காணப்பட்டுள்ளது.


காத்தான்குடி பகுதியில் ஒரே நாளில் 50 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சல்; மிக வேகமாகப் பரவிவருவதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.

இதேவேளைடெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் 4 நாட்களில் காத்தான்குடி பிரதேசத்தில் 4137வீடுகளில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் 223 வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 49 பேர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச பொது;சுகாதார பரிசோதகர் எஸ்.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இராணுவத்தினர் பொலிசார் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post