குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ள நிலையில் இதில் 5 முஸ்லிம்களும் அடங்குவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மேலும் மூன்று முஸ்லிம்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த ஐந்து முஸ்லிம்களதும் ஜனாஸா நல்லடக்கம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
கொலன்னாவ ஜும்ஆ பள்ளிவாசல் மூலம் மேற்படி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.