Top News

கட்டுநாயக்க விமான நிலையத்தால் , 7.6 மில்லியன் நட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திரட்டிக்கொண்ட கறுப்புப் பணத்தை, ஏதாவதொரு இலாபம் தரக்கூடிய வியாபாரத்தில் முதலிடுவது போலவே, இந்த கட்டுநாயக்க விமான நிலையமும் புனரமைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்படுவதற்காக மூடப்பட்ட போது, குறித்த காலப்பகுதியில் வரப்போதும் நட்டத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்று தான் யோசிக்க வேண்டும். எனினும், புனரமைக்கப்பட்ட பின்னர், முன்பு இருந்த வசதிகள் குறைந்துள்ளன.
சில விமானங்களை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்க முடியாத நிலைமையும் புனரமைப்பின் பின்பும் இலாபம் ஈட்ட முடியாத நிலைமையுமே தற்போது தோன்றியுள்ளன என்றார்

Post a Comment

Previous Post Next Post