அப்பிள் நிறுவனம் இந்த வருடம் மூன்று வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ஒரே தடவையில் அறிமுகம் செய்யவிருக்கின்றது .இவை முறையே 5.5 அங்கல அளவுடைய திரை, 4.7 அங்குல அளவுடைய LCD திரை, 5.8 அங்குல அளவுடைய OLED திரை என்பவற்றினைக் கொண்டவையாக காணப்படுகின்றது.
இம் மூன்று வகையான கைப்பேசிகளும் பிரதான நினைவகமாக 3GB RAM இனைக் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளதாக Cowen எனும் நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியான Timothy Arcuri தெரிவித்துள்ளார்.
மேலும் 4.7, 5.5 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட கைப்பேசிகள் 32/128/256GB ஆகிய சேமிப்பு நினைவகங்களையும், 5.8 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட கைப்பேசி 64GB, 256GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5.8 அங்குல திரையினைக் கொண்ட கைப்பேசியில் தரப்படவிருக்கும் மின்கலத்தின் பாவனைக்காலமானது அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய வகையிலும் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக் கைப்பேசிகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment