யெமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளித் தாக்குதலில் 8 அல்கய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. யெமன் - ஷப்வா மாகாணத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர்.
யெமன் நாட்டில் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சால்வின் ஆட்சியை எதிர்த்து அந்தநாட்டு ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலுக்கு ஆதரவு வழங்கும் முகமாக அமெரிக்க படையினரும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் அல்கய்தாவின் முக்கிய தலைவர் ஒருவர் உட்பட 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.