ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முசலி பிரதேச மக்களின் பூர்வீக
காணிகளை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக
பிரகடனப்படுத்தியமைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து
அம்மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 8வது
நாளாக தொடர்கிறது.
தமது ஒரு இலட்சத்துக்கும்
மேற்பட்ட பூர்வீக காணிகள் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டின் வர்த்தமானி
அறிவித்தல்கள் மூலம் வன பாதுகாப்பு பிரதேசமாக
பிரகடனப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா க அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
.
இரண்டு
வர்த்தமானி அறிவித்தல்களும் இரத்துச் செய்யப்பட்டு தமது பூர்வீக
காணிகளுக்கு உத்தரவாதம் வழங்குவதாக ஜனாதிபதியும் பிரதமரும்
எழுத்து மூலம் உத்தரவு வழங்கும் வரை தமது சத்தியாக்கிரக போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலக்குழி பிரதேச அபிவிருத்தி
சங்கத்தின் உப தலைவர் எம்.இமாம் இம்தியாஸ் தெரிவித்தார்.
மறிச்சுக்கட்டி
தக்கியா பள்ளிவாசலுக்கு முன்னால் முசலி பிரதேசத்தைச் சேர்ந்த
மக்கள் தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மறிச்சுக்கட்டி, பாலக்குழி,
கரடிக்குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்டச்சி, அகத்தி முறிப்பு,
வேப்பங்குளம், பொற்கேணி ஆகிய கிராம மக்கள் இப்போராட்டத்தில் பங்கு
கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் வர்த்தமானி
அறிவித்தல் மூலம் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
தங்கள் மேட்டு நிலம் விவசாய நிலம், என்பன அபகரிக்கப்பட்டுள்ளதா கவும் எம்.இமாம் இம்தியாஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின்
செயலாளர் தன்னைச் சந்தித்த முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம்
எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும் எழுத்து மூலம் உத்தரவு
கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின்
செயலாளரது உறுதிமொழிக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. இதேவேளை முசலிமக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம்
தொடர்கிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முசலி பிரதேச மக்களின்
பூர்வீக காணிகளை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக
பிரகடனப்படுத்தியமைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து
அம்மக்கள் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்றும்
ஆறாவது நாளாகத் தொடர்ந்தது. இன்று ஏழாவது நாளாக போராட்டம்
தொடர்கிறது.

Post a Comment