Top News

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயற்பாடுகள் நில மட்டத்தில் விஸ்தரிப்பு



(எம்.எஸ்.எம். ஸாகிர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை கிராமங்கள் தோறும் கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் உருவாக்கும் வேலைத்திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள பல ஊர்களிலும துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இக்கட்சியின் பங்காளர்களாக மக்கள் இருந்து செயற்படுகின்ற ஜனநாயக வழிமுறைகள் ஏற்படும். தத்தமது பிரதேசங்ளின் அபிவிருத்திவேலைவாய்ப்பு உட்பட சகல செயற்பாடுகளும் நிலமட்டத்தில் வெற்றிகரமாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் அமையும். இவ்வாறு கைத்தொழில்வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும்அ.இ.ம.கா. கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.

கல்முனைக்குடியில் குறிச்சிகள் தோறும் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது அதில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில்அரசியலில் நிலவும் ஏகபோக சர்வாதிகாரப் போக்குகள்ஊழல்மோசடிகளுக்கு முடிவு கட்டி சிறந்த போக்குடைய அரசியலை முன்னெடுப்பதற்கு இந்த நிர்வாகக் கட்டமைப்பு வழிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிகளிலுமுள்ள பிரச்சினைகள்தேவைகள்அபிவிருத்தி தொழில் வாய்ப்புகள் பற்றிய தகவல்களைத் திரட்டி இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கையாள்வதற்கான திட்டங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் வைத்து 250பேர் கட்சியில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டனர். விரைவில் குறிச்சி மட்டத்திலான கூட்டங்களைத் தொடராக நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் கிராமியப் பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலிகட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன்கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.சீ.எம். முபீத்பெஸ்டர் றியாஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post