நிலவும் உஷ்ணமான வானிலை மே மாத இறுதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும், குறைந்த காற்றுடனான வானிலையே இதற்குக் காரணம் ஆகும். இதேவேளை, நிலவும் அதிக உஷ்ணமான வானிலை காரணமாக, வைரஸ் தொற்றுப் பரவுவதால் கண் நோய் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் இன்புளுவென்சா வைரஸ் பரவக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment