Top News

சுத்தமான நீர் கிடைக்க முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும்


சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி பேர் அசுத்தமான நீரையே பருகுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அசுத்தமான குடிநீரை பருகுவதால் சுமார் 5 லட்சம் பேர் வரையில் வயிற்றுப்போக்கால் மரணமடைவதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கழிவுகளிலிருந்தே நீரை பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து கழிவிலிருந்து பெறப்படும் நீரினை பருகுபவர்கள் காலரா, வயிற்றுக்கடுப்பு மற்றும் போலியோ உள்ளிட்ட நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்து இந்த முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அனைவரும் சுத்தமான நீரை பருக, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post