Top News

கஷ்ட பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களை விட இத்தகைய எல்லைப் பிரதேசங்களில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், வளங்களும் மிகவும் குறைவாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் சொந்த நிதியிலிருந்து ரிஸ்வி நகர் அல் – இக்பால் பாலர் பாடசாலைக்கு வருடாந்த சீருடை வழங்கும் நிகழ்வு அண்மையில் ரிஸ்வி நகர் அல்-இக்பால் பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சீருடையினை வழங்கி வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...

நான் அபிவிருத்தி விடயங்களில் நகர்ப்புறங்களை விட இத்தகைய எல்லைப் பிரதேசங்களை அதிகமாக முன்னுரிமைப்படுத்தியே எமது வேலைத் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுத்து வருவதோடு எதிர்காலத்திலும் இத்தகைய பிரதேசங்களை வளப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சிறந்த விதத்தில் பயன்படுத்தி தமது பிள்ளைகளை எதிர்காலத்தில் இந்த சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உள்ளது.

மேலும் சிறுவயது முதல் சிறந்த கல்வியினை வழங்குவதன் மூலம் சிறந்ததொரு எதிர்கால சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post