Top News

ராஜீவ் காந்தியை போன்று நரேந்திர மோடி மீதும் தாக்குதல் நடத்தப்படுமா?



இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன கூட்டாக இணைந்து விசேட பிரபுக்கள் பாதுகாப்பு படையணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசேட படையணியே நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவின் நேரடி கண்காணிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு விஜயம் செய்த போது ஏற்பட்ட நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு, சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை விஜயம் செய்யும் இந்திய பிரதமர் மோடிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விசேட பிரபுக்கள் பாதுகாப்புப் படையணியைத் தவிர அரச உளவுப் பிரிவினர் உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Previous Post Next Post