முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க அணியும் நிகாப் ஆடைகளுக்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்றை எகிப்து பாராளுமன்றம் இயற்றி வருகிறது. பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த ஆடையை அணிய தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் ஒப்பீட்டு சட்டவியல் பற்றிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அமனா நுஸைர் முகத்தை மறைக்கும் ஆடை இஸ்லாத்துடன் தொடர்புபட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எம்.பி, இது குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் முகத்தை மறைக்கும் நிகாப் ஆடைக்கு அண்மைக்காலத்தில் எகிப்தில் பல கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரியில் மருத்துவர்கள், மருத்துவ தாதிகள் நிகாப் அணிய கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவ பீடம் தடைவிதித்தது. கடந்த செப்டெம்பரில் பல்கலைக்கழகங்கள் கல்விசார் ஊழியர்களுக்கும் நிகாப் அணிய த விதித்தது.
நன்றி தினகரன்
Post a Comment