Top News

அம்பாறை மாவட்ட ஹாபிழ்களுக்கான மனனப் போட்டிகள் இரண்டாவது நாள் இன்று

கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும்  அம்பாறை  மாவட்ட ஹாபிழாக்களுக்கான மன்னப் போட்டிகள் இரண்டாவது நாளாகவும்  நிந்தவூர்  அல் மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில்  ந​டைபெற்றன. இந்த மன்னப் போட்டி நிகழ்வுகளில்  ஏராளமான  ஹாபிழாக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று  அல் குர் ஆன் மன்னத்தில்  தமது ஆற்றலை வெ ளிப்படுத்தினர்.
 
அம்பாறை  மாவட்ட ஹாபிழ்களுக்கான மன்னப் போட்டி நிகழ்வுக்கான பிரதம  அதிதியாக கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தின்  தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முதல் ஹாபிழுமான  முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் பங்கேற்றார்,
 
அத்துடன் இந்த நிகழ்வில் போட்டியிடும் ஹாபிழாக்களின்  பெற்றோர்கள்,பிரதேச்செயலாளர்கள், ஓய்வுபெற்ற  அதிபர்கள் ,ஆசிரியர்கள்,குர் ஆன் மதரசாக்களின் உலமாக்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் இதன்போது  கலந்து கொண்டனர்,
 
கிழக்கு மாகாணத்தின்   ஹாபிழ்கள் ஒன்றியத்தில் அம்பாறை  மாவட்டத்தில் 500க்கும்  மேற்பட்ட  ஹாபிழ்கள் பதிவு செய்துள்ளனர், நேற்றைய தினம்  ஹாபிழ்களுக்கானபோட்டிகள்  இடம்பெற்றதுடன் இன்றைய தினம் ஹாபிழாக்களுக்கான  போட்டிகள்  நடைபெற்றன.
 
 இதேவேளை  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போட்டிகள் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காத்தான்குடியில்  இடம்பெறவுள்ளன. இதில் ஹாபிழ்களுக்கான போட்டிகள் காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன் ஹாபிழாக்களுக்கான போட்டிகள் காத்தான்குடி ஜாமிய்யதுல் சித்தீக்கியா பெண்கள் அறபுக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன,
 
திருகோணமலை  மாவட்ட ஹாபிழ்களுக்கான மனனப் போட்டிகள் இம்மாதம்  எதிர்வரும்  16 ஆம் திகதி காத்தான்குடி ஜாமிஉல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளன.
 
இவற்றின்  இறுதி நிகழ்வும் கிழக்கு மாகாண ஹாபிழ்களின்  மாபெரும் மாநாடும் எதிர்வரும் மே மாதம்  ஏறாவூரில் கோலாகலமா நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post