கண்களை மூடிக்கொண்டு இருட்டுக்குள் இருப்பதாக நினைக்கும்
கள்ளப் பூனைகள் போன்று வில்பத்துப் பிரச்சினையில் இத்தனை வருட காலம் கண்களை
மூடிக்கொண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு இருந்த முஸ்லிம் காங்கிரஸின்
சமூகத்துரோகிகள் வில்பத்து வடக்குப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின்
காணிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பறிக்கப்பட்ட பின்னர் இப்போது
விழித்தெழுந்தது போல துடிக்கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் முதல் அக்கட்சியில்
இறுதியாக இணைந்த முசலி மண்ணின் மைந்தன் ஹுனைஸ் பாரூக் வரை "வில்பத்து
ரிஷாட்டின் நாடகம்" எனக் கூறியவர்களே!
கொழும்பில் இருந்து முசலி முஸ்லிம் பிரதேசத்திற்கு பௌத்த
தேரர்களை கொண்டு வந்தவரும் இந்த ஹுனைஸ் பாரூக் தான் என்பதற்கு ஆதார
பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் ரிஷாட்டை பழி வாங்குவதற்காக தான் பிறந்த மண்ணில்
வாழச் சென்ற மக்களை காட்டிக் கொடுத்த கோடரிக்காம்பு அவர். அதற்காகத் தான்
நேற்று (02) மறிச்சுக்கட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அவரை
ஓடோட விரட்டினர்.
தலைதெறிக்க கொழும்புக்கு ஓடி வந்த அவர் கொழும்பில் ரங்காவின்
வேட்டிக்குள் புகுந்து கொண்டு ரிஷாட்டைத் தூற்றினார். மின்னலில் வந்து
பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இடியைப் போட்டார். பின்னர்
வசந்தம்ஃதொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முஷர்ரபிடம்
வசமாக மாட்டிக்கொண்டு சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் மூக்குடைபட்டார்.
அதிர்வு நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு திரு திருவென முழிந்தார்.
மறிச்சுக்கட்டியிலிருந்து விரட்டப்பட்ட நிலையில்
கட்டுக்கரைக்குளக்கட்டில் நின்று கொண்டு களத்துக்குள் பாயலாமா என யோசித்த
அவர் உயிரை மாய்ப்பதற்குத் துணிவில்லாமல் லீடருடன் தொடர்பு கொண்டார்.
லீடரிடம், "சேர் எனக்கு ஊர் பக்கம் தலைகாட்ட முடியாமல்
இருக்கின்றது. யாரின் காலைப்பிடித்தாவது ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம்
காங்கிரசும் இந்தப் பிரச்சினையில் அக்கறையுடன் இருப்பதை வெளியுலகத்திற்குக்
காட்ட வேண்டும்" எனக் கெஞ்சினார்.
ஹுனைஸை எப்படியாவது திருப்திப்படுத்த வேண்டுமென நினைத்த தலைவர் ஜனாதிபதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது.
கல்முனையில் ஹரீஸ் கூறியதைப் போன்று "20 இலட்சம் முஸ்லிம்
மக்களின் தானைத் தலைவனான எங்கட லீடர் ஜனாதிபதியிடம் டைம் கேட்டால்
கிடைக்குமென்ற" ஹரீஸின் வீராப்புப் பேச்சும் புஸ்வானமாகியது.
இந்த நிலையில் தான் ஜம்இய்யதுல் உலமாவும் முஸ்லிம் சிவில்
சமூகமும் ரிஷாட், ஆசாத்சாலி, முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் சந்தித்த அதே
அபேகோனைத்தான் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடி" என்ற வேதனையில் முஸ்லிம்
சமூகத்தில் காவலாளிகள் என தம்பட்டம் அடிக்கும் இந்த ஏமாற்றுக் கூட்டமும்
சந்தித்துள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்யத் தீர்மானித்துள்ள தங்களது
அருமைத் தலைவர் நாடு திரும்பியவுடன் கொழும்பில் இருந்து டெக்னிகல் டீமுடன்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் வில்பத்துவை அளந்து மிருகங்களுக்கும்,
மனிதர்களுக்கும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள்
வெளிவந்துள்ளன. முசலி மக்களை இறைவன் தான் காப்பாற்ற் வேண்டும், இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.