Top News

ஓட்டமாவடியில் கிம்மா தனியார் வைத்தியசாலை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

அல்கிம்மா நிறுவனமானது கல்குடா தொகுதியில் கடந்த 6வருடங்களாக பல சமூக சேவைகளை செய்து வருகின்றமை யாவரும் நன்கறிந்த விடயமே. அது மட்டுமல்லாமல் இலங்கையின் பல பாகங்களிலும் குடி நீர்க்கிணறுகளை அமைத்தல் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளைச்செய்தல் போன்ற உதவிகளையும் செய்து வருகின்றது. 

அதன் தொடரில் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி MMS.ஹாறூன் ஸஹ்வி அவர்களின் தீவிர முயற்சியினால் ஒட்டமாவடி MPCS வீதியில் இரண்டு மாடிக்கட்டடத்தில் அதி நவீன தொழிநுட்பங்களுடன் அனைத்து வசதிகளுடனும் அமையப்பெற்றிருக்கும் கிம்மா தனியார் வைத்தியசலை நேற்று 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி MMS. ஹாறூன் (ஸஹ்வி), பிரதிப்பணிப்பாளர் எச்.எம். ஜாபிர், வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. Bm.பிர்னாஸ் (MBBS,SL) அவர்களும், பிதம அதிதிகளாக அல்-கிம்மா நிறுவனத்தின் தேசியத் தலைவர் சவூதி நாட்டைச்சேர்ந்த அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ்ஸபீஈ, கிழக்கு மாகான முதலமைச்சர் அல்- ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ், மாகான சபை உருப்பினர் சிப்லி பாறூக் மற்றும் பிரதேச சபை உருப்பினர்கள், வைத்தியர்கள், ஊர் பிரமுகர்கள் பள்ளிவாயல் தலைவர்கள் என்று இன்னும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

இதன் போது திறப்பு நிகழ்வை முன்னிட்டு வறிய சிறார்களுக்கான இலவச கத்னா நிகழ்வும், கொலஸ்ட்ரோல் மற்றும் சக்கரை நோயினை கண்டறிவதற்கான இலவச பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

செய்தியாளர்
எம்.ஐ.அஸ்பாக்

Post a Comment

Previous Post Next Post