ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் உக்குவளை முகம்மத் ஜிசான் உயிரிழந்துள்ளார்

NEWS
0 minute read
0

இன்று காலை ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை ( உக்குவளை) வாரகாமுற பகுதியை சேர்ந்த முகம்மத் ஜிசான் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

ஜப்பான் யொகொகாமா (ச்சோகோ) பிரதேசத்தில் கட்டிடடங்க்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெகோ ரக இயந்திர சாரதியின் கவனயீனம் காரணமாக தலையில் அடிபட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

ஜனாஸா பிரதேச மையவாடியில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரு தினங்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்துள்ள முகம்மத் ஜிசான் சுமார் 31 வயதுடையவர் எனவும் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தந்தை எனவும், விபத்து ஏற்படுத்திய பெகோ இயந்திர சாரதியும் இலங்கையை சேர்ந்தவர் என மேலும் தெரிவிக்கபடுகிறது.

தகவல் : ஜப்பான் வாழ் வாசகர்கள் -
To Top