Top News

மத்திய மாகாண முஸ்லிம் பிரதேசத்தில் அதிகம் இடம்பெறும் கலப்பு திருமணம்


இலங்கையில் மத்திய மாகாண முஸ்லிம் பிரதேசத்தில் அதிகம் இடம்பெறும் கலப்பு திருமணம் யார் இதனை கண்டு கொள்வது?

மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிதேசங்களில் இருக்கின்ற பல  கிராமங்களில் முஸ்லிம்கள் குறிப்பாக  முஸ்லிம் ஆண்கள் வேறு இனத்தவர்களான பௌத்த கிறிஸ்தவ பெண்களை திருமணம் முடித்து அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றாமல் அவர்களை அதே பாணியில் விட்டு விட்டு குடும்பங்களை நடாத்திச் செல்வதனை அதிகம் காண முடிகிறது.

இஸ்லாம் ஓர் புனிதமான மார்க்கம்  யாருக்கும் பிரச்சினை இல்லாத சமாதானமான மார்க்கம். தூய இஸ்லாம் ஏகத்துவத்தை போதிக்கின்றது. அன்னலார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு இணங்க உலகத்தில் ஒரே ஒரு இறைவன் அவனது திருத்தூதர் என்ற அடிப்படை கோட்பாட்டிற்கு அமைய இஸ்லாத்தை பூரணமாக பின்பற்றுகின்ற முஸ்லிம்கள் ஆகிய நாம் இப்படியான செயற்பாடுகளை செய்வது மிகவும் வேதனைக்கரிய விடயமாகும்

அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் அடிப்படையில் அதிகமாக காதல் திருமணங்கள் இப்படியாக கலப்பு திருமணங்களாக இடம்பெருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது குறிப்பாக பெரும்பாலான இஸ்லாமிய பெரும்பான்மையைக் கொண்ட கிராமங்களில் நடைபெறாது. அதாவது உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற காத்தான்குடி, கல்முனை ,சாய்ந்தமருது  போன்று அல்லாது ஏனைய கண்டி மாவட்டத்தில் இருககின்ற ஏனைய பிரதேசங்கள் அது போல அங்கிருக்கின்ற சிங்கள கிராமங்களோடு சேர்ந்து இருக்கின்ற முஸ்லிம் மக்கள் இப்படியானதொரு செயற்பாட்டை செய்யக் கூடியதை காண முடிகிறது.

இவற்றினை தடுப்பதற்காக ஒரு விசேட செயற்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் அப்படியான திருமணங்கள் நடைபெருகின்ற பொழுது அவர்களை அந்தந்த பள்ளிவாசல் நிருவாகம் உரிய முறையில் கண்டு கொள்ள வேண்டும். அத்தோடு இப்படியான செயற்பாட்டை தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் செய்ய வேண்டும். இது ஒரு நவீன முறையில் இடம்பெற இருக்கின்ற தஹ்வா பணி தான் என்றாலும் இவற்றை செயற்படுத்த வேண்டிய நோக்கம் எமக்கு இருக்கிறது.

இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமதிகம் வேரூண்றி இருக்கின்ற நாம்  இப்படியான கலப்பு காதல்களை செய்து கொண்டிருப்பதை நாங்கள் பாத்திருக்கின்றோம். முஸ்லிமான ஆண் ஏனைய  அந்நிய பெண்களோடு  பேசுவது அவர்களோடு அளவளவாடுவது என்ற பல பிரச்சாரங்கள் பல விடயங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படி இருக்கையில் இப்படியான விடயங்களைத் தடுப்பதன் மூலம்இலங்கையில் இஸ்லாத்தை ஏனைய மதத்தினருக்கு போதிக்கக கூடிய நல்ல ஒரு பண்பினை தோற்றுவிக்க முடியம்.  இதற்காக பள்ளிவாசல் நிருவாகங்கள் முஸ்லிம் அமைப்புக்கள் ஏனைய மஸ்லிம் சிவில் அமைப்புக்கள் ஊரில் இருக்கின்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் இதனை தடுப்பதற்காக ஒன்றிணைவோம்.

கலப்புத் திருமணங்கள் இடம்பெருகின்ற பொழுது முஸ்லிம்கள் ஆகிய நாம் தங்களுடைய தனித் தன்மையினை பேணி எங்களுடைய மார்க்கத்தை பரப்புகிற செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இஸ்லாம் என்பது ஒரு தனி நபராலோ அல்லது ஒரு குழுவினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அது இறைவனுடைய மார்க்கம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. கலப்பு திருமணங்கள் இடம்பெருகின்ற பொழுது முறன்பாடுகளை தவிர்த்து புனித இஸ்லாத்தை இலங்கையில் எங்கும் பரப்ப அனைவரும் ஒன்றிணைவோம்.

Post a Comment

Previous Post Next Post