இன்றிருக்கும் நவீன ஜாஹிலியா காலத்தில் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிவதே பெரிய விடயம் அதனை கேலி செய்வது, அல்லது பேஸ்கவரை நக்கல் செய்வது மிகவும் கவலைக்குரியது.
அண்மையில் பொத்துவில் பிரதேச அரச அலுவலகம் ஒன்றில் அலுவலகததின் பிரதானி ஒருவர் பேஸ்கவர் அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்து பேஸ்கவர் போட்டதால் விளங்குதில்லை பெயரை எழுதி ஒட்டுங்கள் என்று நக்கலாக கூறியுள்ளார். மிகவும் கவலைக்குரிய விடயமே இது.
முஸ்லிம் பிரதேசங்களில் இஸ்லாமிய நடைமுறை பேணப்பட வேண்டும், அதனை பாடசாலை, அலுவலகங்கள் போன்றவற்றில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அதைவிடுத்து இஸ்லாமிய நடைமுறையை பேணுவோரை நக்கல் நையாண்டி செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
Post a Comment