54,250 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மாதுறுஓயா தேசியப் பூங்காவானது சீனாவுக்கு விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த இடமானது சீனாவுக்கு விற்பதற்கு முயற்சி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 43,250 ஏக்கர் நிலப்பரப்பு பயிர்செய்கைக்காகவும்,ஏனையவை கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது குறித்த நிலப்பரப்பிற்குள் கால்நடைகளை விடுவிது தடைசெய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய 172 விடயங்களை முன்வைத்து இது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுசூழல் அமைச்சிடம் மக்கள் தகவல் கோரியுள்ள போதும், சம்பந்தப்பட்டவர்கள் 15 கேள்விகளுக்கு மட்டுமே பதில் வழங்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரதேசவாசிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இ;ந்த மனு மீதான விசாரணையானது எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment