உலமாக்களையும் ஹாபிழ்களையும் சங்கைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்

NEWS
0


இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும் கண்ணியப்படுத்துவதை காணக்கிடைப்பது அரிதாகவே உள்ளதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஹாபி்ஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

உலமாக்களுக்கு ஹாபிழ்களுக்கும் மதிப்பளிக்காததன்மையினால்  ஆன்மீக ரீதியிலும்  லௌகீகரீதியிலும்  பின்னடைவுகளை சந்தித்த சமூகமாகமுஸ்லிம் சமூகம்  மாறும் ஒரு  துர்ப்பாக்கியநிலையினை  தடுப்பதற்கு  அனைவரும் முன்வரவேண்டுமென கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள்விடுத்தார்.

கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால்முன்னெடுக்கப்படும் ஹாபிழ்களுக்கான அல்குர் ஆன்மனனப் போட்டி  நிகழ்வின்  மட்டக்களப்புமாவட்டத்திற்கான  போட்டிகள் காத்தான்குடிஜாமி்ய்யதுல்   பலாஹ் அரபுக்கல்லூரியில் இடம்பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து  கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணமுதலமைச்சர்   இதனைக் குறிப்பிட்டார்,

அங்கு தொடர்ந்தும்  உரையாற்றிய கிழக்கு மாகாணமுதலமைச்சர்,
பௌத்த மதத்தைச்  சேர்ந்தவர்கள் தமது வயதுக்குமூத்த  தேரராக இருந்தாலும்  சிறு வயது தேரராகஇருந்தாலும் அவர்களது  மத அனுஷ்டானங்களின்பிரகாரம் அவர்கள் தேரர்களுக்கு மதிப்பளிப்பதை நாம்காண முடியும்,

பஸ்களில்  செல்கின்ற போது  கூட   எந்த வயது தேரர்கள் வந்த  போதிலும் கூட எழுந்து  நின்றுஅவர்களுக்கு மரியாதை அளிப்பதுடன் அவர்களுக்கு தமது இருக்கைகளை கொடுப்பதையும் நாம்அவதானிக்க கூடியதாக இருக்கும்,

இதனுடன்  நாம் இன்று சமூகத்தில்  உலமாக்களுக்கும்ஹாபிழ்களுக்கும் வழங்கப்படும் மரியாதையைஒப்பிட்டுப்பார்த்தால் பூச்சியம் என்றே  சொல்ல வேண்டும், இன்று  நம் சமூகத்தில்  மலிந்துள்ள சீரழிவுகள்மற்றும் குற்றச் செயல்களுக்கும்  இதுவும் ஒருகாரணம்  என கூறலாம்,

நாம் சிறு வயதினராக இருக்கும் போதெல்லாம்உலமாக்களுக்கும் ஹாபிழ்களுக்கும் அளிக்கப்படும்கௌரவத்தையும் மரியாதையைும் நாம்கண்டிருக்கின்றோம்,
ஆகவே அவ்வாறான ஒரு நிலையை மீண்டும்சமூகத்தில் உருவாக்குவதற்கான பொறுப்பும் கடமையும்இன்றைய  சமூகத் தலைவர்களுக்கு உள்ளது என்பதைநினைவுபடுத்த வேண்டும் என கிழக்கு முதலமைச்சர்ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,

கிழக்கு மாகாண ஹாபிழ்கள்கள் ஒன்றியத்தின்தலைவராக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட்  செயற்பட்டு வருவதுடன் அவரதுமுயற்சியின் பயனாக ஹாபிழ்களுக்கான  குர்ஆன்மனனப் போட்டி நிகழ்வுகள்   அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைமையப்படுத்தி இ்டம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில்  அம்பாறை மாவட்டத்திற்கானபோட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் நிறைவுற்றதுடன்மட்டக்களப்பு மாவட்டத்திற்கான  போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தன.

ஹாபிழ்களுக்கான குர்ஆன்  மனனப் போட்டிகள்காத்தான்குடி ஜாமிய்யுல் பலாஹ் அரபுக்கல்லூரியில்இடம்பெற்றதுடன்  ஹாபிழாக்களுக்கான போட்டிகள்ஜாமிய்யதுல் சித்திக்கீயா  அறபுக்கல்லூரியில்இடம்பெற்றன.

இதன்போது  கிழக்கு முதலமைச்சர் ஒவ்வொருஹாபிழ்களையும் தனித் தனியே சந்தித்து அவர்கள்எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது,

இவற்றின்  இறுதி நிகழ்வும் கிழக்கு மாகாண ஹாபிழ்களின்  மாபெரும் மாநாடும் எதிர்வரும் மே மாதம்  ஏறாவூர் அலிகார் மைதானத்தில் கோலாகலமா நடத்த ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top