காலி கோட்டை பகுதியில் கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள முஸ்லிம் அடக்கஸ்தலத்துக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காலி முஸ்லிம் கலாசார சங்கம் பதிவுசெய்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யப்பட்டுவருவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ முகாமொன்றை அண்மித்து அமைந்துள்ள இந்த அடக்கஸ்தலம் பல நூறு ஆண்டுகள் பழைமையானது என நம்பப்படுகின்றது.
கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியிலேயே குறித்த அடக்கஸ்தலம் உள்ளதாக காலி கோட்டை இராணுவ முகாமின் அதிகாரியொருவர் பிபிசி செய்திக்கு தெரிவித்துள்ளதுடன் குறித்த இடத்துக்கும் இராணுவ முகாமுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.