Headlines
Loading...
முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கதைக்க அதாஉல்லா அருகதையற்றவர்;தவம்

முஸ்லிம்கள் எதிர்காலம் பற்றி கதைக்க அதாஉல்லா அருகதையற்றவர்;தவம்



கிராபிக் இமேஜ் - காப்பக படம்

சிலோன் முஸ்லிம் அக்கரைப்பற்று செய்தியாளர்

பழைய புராணக்கதைகள கூறி மக்கள் மனதை மாற்ற எத்தனிக்கும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் மேடைப்பேச்சுக்கள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக நகைப்பாக கூறியுள்ளார் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.

இந்த நல்லாட்சிக்கு பின்புலத்தில் நோர்வே இருப்பதாகவும், அது மாத்திரமின்றி ரணில் விக்ரமசிங்க முஸ்லிம்களின் எதிரி என்றும் நல்லாட்சியில் அதிக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுவதாகவும், வடக்கும் கிழக்கும் இணையப்போகிறது என்றும் முட்டாள்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் கூறித்திரிவது நகைப்பாக உள்ளதென குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர் அதாஉல்லாவால் மாகாண சபை உறுப்புரமையை கூட எதிர்வரும் தேர்தல்களில் பெறமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி கதைக்க எந்தவிதத்திலும் அருகதையற்ற அதாஉல்லா நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை நிறுத்தினார், பின்னர் அவர் அதிகாரத்தில் இருந்த பொழுது வட்டமடு உள்ளிட்ட 35000 ஏக்கர் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து சூறையாடப்பட்டது இதனையும் தாண்டி ஒலுவில் துறைமுகம் சிங்களவர்களின் ஆதிக்கத்துக்குள்ளாகி மீன்பிடி துறைமுகமாக மாறியது, அஷ்ரப் நகரில் இராணு குடியேற்றம் ஆயிரம் உள்ளது விரைவில் தெளிவு படுத்துவோம்.

கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட பல இனவாத அமைப்புக்கள் இன்றும் அதே வேலையை செய்து வருகிறது, இதனை இன்றும் பின் நின்று செயல்படுத்துவபர்கள் அவர்கள் தான் இதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உண்டு. எப்படியாவது இனவாதம் மூலம் ஆட்சியை கவிழ்க்க எத்தனிக்கின்றனர் ஆனால் அது இறைவன் துணையால் நடந்துவிடாது. அதஉல்லா ஓய்வெடுத்து வீட்டில் இருப்பது நல்லது காரணம் மக்களை மீண்டும் குழப்பாமல் அவர் ஓய்வெடுக்கலாம் முஸ்லிம்கள் மஹிந்தவை எதிர்த்தபோது அவருடன் ஒன்றிப்போய் இருந்து அவருக்கு பிரச்சாரம் செய்தவர் இந்த அதஉல்லா என்பதை யாராலும் மறக்க முடியாது என்றார்.


0 Comments: