Top News

மக்களின் காணிகளை பறித்து வீதிகளில் அலைய விட்டிருக்கும் அரசாங்கம்

"யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அரசாங்கம்மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலைய விட்டிருப்பது பரிதாபமானதுசொந்த இடங்களில் குடியேறி வாழுவதற்கான அடிப்படைஉரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கமுடியும்வனபாதுகாப்பு பிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள்விவசாயம் செய்வதனை தடுத்து விட்டுபடையினரே அங்கு விவசாயம்செய்கின்றனர்வன பாதுகாப்பு பிரதேசத்தில் விவசாயம் செய்வது குற்றம் என்றால்படையினருக்கு அந்த உரிமையை வழங்கியது யார்..? படையினரின் கடமைபயிர்ச்செய்கை செய்வதா அல்லது மக்களை பாதுகாப்பதா..? எனவேமக்களின்அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாகநிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்"நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளர் பொறியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.


மன்னார்முசலி பிரதேச காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சர்ச்சைக்குரியவர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக 
நல்லாட்சிசக்கான தேசிய முன்னணி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றினைநேற்று  (06.04.2017) காலை கொழும்பில் நடாத்தியதுஇவ் ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG சார்பாக அதன் தவிசாளர் பொறியியலாளர்அப்துர் ரஹ்மான்பொதுச் செயலாளர் நஜாமுஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபைஉறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர்கலந்து கொண்டு கருத்துக்களைத்தெரிவித்தனர்சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதுபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்ததாவது"யுத்தத்தின் பின்னர் வடகிழக்கில் மீளக்குடியேறும் தமிழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தினை தடுப்பதற்கான பல உபாயங்களை இனவாத சக்திகள் மிக நீண்டகாலமாகவே செய்து வருகின்றனவனவளங்களைப் பாதுகாத்தல் என்ற போலியானகோசத்தோடு தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை'பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாகமாற்றுவது அவர்களின் பிரதான உபாயமாகும்.முசலி பிரதேச முஸ்லிம் மக்களின் காணிகளையும் இதே உபாயத்தைக் கையாண்டேதற்போது பறிக்க முற்பட்டிருக்கின்றார்கள்இதற்காகவே 'மாவில்லு பேணற்காடு'என்ற புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுஇந்த விடயத்தில்இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஜனாதிபதி நடந்து விட்டார் என்பதுகவலை தருகின்ற விடயமாகும்.இந்த நாட்டில் வனவளங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசியக் கொள்கைஇருக்கிறதுஅதற்கமைவாக ஒரு வன பாதுகாப்பு சட்டமும் இருக்கிறதுஇந்தஇரண்டிலுமே சொல்லப்பட்டுள்ள அடிப்படை விடயங்களை மீறும் வகையிலேயேஇந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செய்துள்ளார்.

 வனபாதுகாப்பு வலையங்களை நிர்ணயிக்கும் போது அப்பிரதேசத்தில் வாழும்மக்களின் பாரம்பரிய காணி உரிமைகளும் பொருளாதார வாழ்வாதார நலன்களும்மதிக்கப்பட வேண்டும் என தேசிய வனக் கொள்கை சொல்கிறதுஅது போலவேபுதிய எல்லைகளை நிர்ணயிக்கும் போது போதிய கால அவகாசம் எடுத்து புதியஎல்லைகள் எவ்வாறு அமையப் போகிறது என்ற தெளிவான விளக்கங்களை பிரதேசசெயலாளர் மக்களுக்க தெரியப்படுத்த வேண்டும்அத்தோடு புதிய எல்லைகள்அமைவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் எவ்வாறானவை என்ற அறிவூட்டல்களையும்மக்களுக்கு வழங்க வேண்டும் என வன பாதுகாப்பு சட்டத்தின் மூன்றாம் பிரிவுதெளிவாகச் சொல்கிறதுஆனால் இங்கு அவ்வாறு எதுவும் நடைறெவில்லைகடந்த மார்ச் 13 ஆம் திகதி ஒரு அறிவித்தலை முசலி பிரதேச செயலாளர் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறார்பொதுமக்கள் தமது ஆட்சேபனைகளைவழங்குவதற்கான 14 நாள் கால அவகாசம் முடிவதற்கு முன்பாகவே மார்ச் 21 ஆம்திகதி ஜனாதிபதி இவ்வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளார்ஆக,நாட்டின் தேசிய வனக் கொள்கையினையும் அதனோடு தொடர்புபட்ட சட்டநிபந்தனைகளையும் அப்பட்டமாக மீறும் வகையிலேயே இந்த வர்த்தமானிஅறிவித்தல் செய்யப்பட்டள்ளது.

இதற்கு முதலிலும் முசலி பிரதேச மக்களின் காணிகளை கையகப்படுத்தும்மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 2012 ஆம் ஆண்டிலும்செய்யப்பட்டிருந்ததுஅதுவும் கூட மிகவும் இரகசியமாகவும்தந்திரமாகவும்செய்யப்பட்டிருந்ததுஅச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மறிச்சிக்கட்டி மரிக்கார்தீவுபிரதேச மக்கள் இன்றும் தமது காணி உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகநீதிமன்றங்களில் போராடிவருகின்றனர்இந்த நிலையிலேயே மற்றுமொருவர்த்மானி அறிவித்தல் மூலம் முசலி பிரதேச மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புமற்றும் விவசாயக் காணிகள் ஏராளமானவை தற்போது பறிபோகும் அபாயம்தோன்றியுள்ளதுஅரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக முசலிபிரதேச செயலகப் பரிவிலுள்ள காணிகளில் ஏறத்தாள 80 வீதமான காணிகளைமுஸ்லிம் மக்கள் இழக்கிறார்கள்

இதற்குப் புறம்பாக முஸ்லிம்-தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசபடையினர் கையகப்படுத்தி முகாமிட்டிருக்கிறார்கள் 
முல்லிக்குளம் எனப்படும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான முழுக்கிராமமுமேகடற்படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கிறதுஇவ்வாறு காணிகளை இழந்தஏழைத்தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களை தம்மிடம் மீளவும் கையளிக்குமாறுகோரி கடந்த இரண்டு வாரங்களாக பல கஸ்டங்களுக்கு மத்தியில் போராடிவருகிறார்கள்அதேபோலவே சிலாபத்துறைப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச்சொந்தமான காணிகளையும் கடற்படையினர் கையகப்படுத்தி இருக்கிறார்கள்.இன்னும் பல இடங்களிலும் இது நடந்திருக்கிறது

இதில் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் தமது சொந்த இடங்களில் மக்கள்குடியேறுவதற்கான அனுமதியினை மறுத்து விட்டு அக்காணிகளில் படையினர்விவசாயம் செய்து வருகிறார்கள்மக்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளின்அறுவடைகளையும் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்வனபாதுகாப்புபிரதேசமாக அறிவிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மக்கள் விவசாயம் செய்வதனைதடுத்து விட்டுபடையினரே அங்கு விவசாயம் செய்கின்றனர்இதனை நாம் எமதுகள விஜயத்தின் போது நேரடியாகக் கண்டோம்.

இங்கு இரண்டு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் வன பாதுகாப்பு பிரதேசத்தில்விவசாயம் செய்வது குற்றம் என்றால் படையினருக்கு அந்த உரிமையை வழங்கியதுயார்..? அடுத்ததாக படையினரின் கடமை பயிர்ச்செய்கை செய்வதா அல்லதுமக்களை பாதுகாப்பதா..? ஜனாதிபதிக்கும் படையினருக்கம் மக்களே சம்பளம் வழங்குகின்றனர்எனவேஅவர்களைப் பாதுகாப்பதுவே அவர்களின் கடமைஇவ்வாறிருக்க மக்களின்உரிமைகளையும் காணிகளையும் பறித்து அவ்களை நடுத்தெருவில் நிறுத்துவதைஅனுமதிக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்து இத்தனை வருடங்கள் கழந்து விட்ட நிலையிலும் இவ்வாறுஅரசாங்கம் மக்களின் காணிகளைப் பறித்து அவர்களை வீதியில் அலையவிடுவதுபரிதாபமானதுசொந்த இடங்களில் குடியேறி வாழுவதற்கான அடிப்படைஉரிமைகளை வழங்காத நிலையில் தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கமுடியும்எனவேமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்றநடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி மக்களின் காணிகளை அவர்களிடமேஒப்படைக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post