இன்று இலங்கை
நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் உணரப்படுகின்ற போதும் இவ்வரசாங்கம்
எதனையும் உருப்படியாக செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.03-04-2017ம் திகதி திங்கள் கிழமை பானந்துறையின்
முன்னாள் தவிசாளர் இபாஸ் நபுஹான் தலைமையில் பானந்துறையில் இடம்பெற்ற
முஸ்லிம்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு
மேலும் கருத்து தெரிவிக்கையில், எங்களது
எதிரிகள்,எங்களை வீழ்த்த பிரதான ஆயுதமாக இனவாதத்தை கையில் எடுத்திருந்தனர்.அந்த
வகையில் தான் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.இன்று சிறுபான்மையின மக்கள் தங்களது
ஒளியாக கருதிய இவ்வாட்சியை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எமது
ஆட்சிக் காலத்தில் வடக்கிலும்,கிழக்கிலும் பலவாறான அபிவிருத்தி திட்டங்களை
மேற்கொண்டோம்.எமது வடக்கு அபிவிருத்திக்கு சில கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத
நிலையிலும் நாம் அங்கு அபிவிருத்திகளை செய்தோம்.
தற்போதைய
ஆட்சிக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.இவ்வாறான ஒத்துழைப்புக்கள்
எமது ஆட்சிக் காலத்தில் எங்களுக்குகிடைத்திருந்தால் எங்களது செயற்பாடுகளின் நிலை
வேறாக அமைந்திருக்கும்.இவ்வாட்சியானது இந் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி
மத நல்லிணக்கை கொண்டு வர வேண்டும்.இன்றைய நிலையில் சர்வதேச அழுத்தங்களில் இருந்து
விடுபட இது எமக்கு அவசியாமனதும் கூட.
எமது ஆட்சிக்
காலத்தில் நாம் ஒரு போதும் இனவாத ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டதில்லை.நான்
இன்று பேசிக்கொண்டிருக்கும் இவ்வூரில் (பானந்துறை) முஸ்லிம் ஒருவரே தவிசாளராக (இபாஸ்
நபுஹான்) இருந்தார்.இது பெரும் பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் ஒரு ஊராகும்.இங்குநாங்கள்
ஒரு முஸ்லிமை தவிசாளராக நியமித்துள்ளமையானது நாங்கள் இனவாத ரீதியான
செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் அல்ல என்பதற்கான துல்லியமான சான்றாகும்.
அலுத்கம கலவரம் இடம்பெற்ற பின்னர் நாம் அந்த மக்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுத்தோம். சேதமடைந்தவற்றை உடனடியாக புணரமைத்து கொடுத்தோம்.அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்னர்ஆட்சி மாற்றம் இடம்பெற்று விட்டது.ஆனால்,இன்று அலுத்கமையை காட்டி முஸ்லிங்களின் வாக்குகளைபெற்றவர்கள் அவர்களுக்கு பொருள் சேத நஸ்ட ஈட்டை கூடபெற்றுக்கொடுக்கவில்லை.அலுத்கமை கலவரம் தொடர்பிலான விசாரணைகளை கூட கிடப்பில் போட்டுவிட்டனர்.இதனை விசாரித்தால் உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சம் தான் கிடப்பில் போட்டதன்
பின்னணியாகும்.
எமதுஆட்சிகாலத்தில் சம்பிக்க ரணவக்கவின் அடியாட்களாக இருந்த ஓரிரு தேரர்கள் மட்டுமே முஸ்லிங்களுக்கு எதிராகசெயற்பட்டார்கள்.முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு குரல்கொடுத்தார்கள்.ஆனால்,இன்று ஊர் ஊராகமுஸ்லிங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுகின்றார்கள்.ஊருக்கொரு அடியாட்கள் உருவாகிவிட்டார்கள்.இவற்றை தடுத்துநிறுத்த முஸ்லிம் அமைச்சர்கள் திராணி அற்று
இருப்பதுடன் இவ்வாட்சியுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றனர்.எமது ஆட்சிக்
காலத்தில் இவ்வாறான ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்ற போது அவற்றை எமக்கு எதிராக திருப்பி விட்டார்கள்.முஸ்லிம்அரசியல்
வாதிகள் மட்டுமல்ல ,இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த முஸ்லிம்களும் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு மௌனித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
Post a Comment