ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
(வீடியோ).,வாழைச்சேனை குப்பைகள் காரமுனையில் கொட்டப்படுவதினால் யானைகள் அழிவடைகின்றது. ஹம்பாந்தோட்டை காமினி..
வீடியோ குப்பைகள் சம்பந்தமாக காமினியின் கருத்து:- www.youtube.com/watch?v=pZkOcu-YxqA&feature=youtu.be
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்ட குப்பைகள், தின்ம கழிவுகள்,பொலித்தீன் பைகள் என்பனை வாகைரை பிரதேச செயலக நிருவாகத்திற்குட்ட ஓட்டமாவடி பொலன்னறுவ கொழும்பு பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பிரதேசமான காரமுனையில் கொட்டப்பட்டும் விடயமாக இருந்து வருகின்றது.
அப்பிரதேச காடுகளில் வாழ்ந்து வருக்கின்ற இலங்கையின் தேசிய மிருகமும், சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்திழுக்கின்ற மிருகமுனான யானைகள் குறித்த பிரதேசத்தில் கொட்டப்படுகின்ற குப்பைகளை உணவாக உட்கொள்வதனால் அவைகள் மிக விரைவில் நோய்களுக்கு உள்ளாகி அழிவடையக்கூடிய மிருமாக மாறிவருகின்றது.
இதனை அறிந்த ஹம்பாந்தோட்டையினை சேர்ந்த சமூக சிந்தனையாளரான ஜே.ஆர்.ஏ.காமினி தர்மசிறி குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து இப்பிரச்சனையினை தேசிய மயப்படுத்தி இலங்கை திரு நாட்டின் தேசிய மிருகமாக கருதப்படுகின்ற யானைகளை காரமுனை பிரதேசத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஊடக நேர்காண்லினை தந்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த காமினி… யானைகள் குறித்த பிரதேசத்தில் கொட்டப்படுக்கின்ற நச்சுத்தன்மை வாய்ந்த தின்ம கழிவுகளையும், போத்தல் ஓடுகளையும், பொலித்தீன் பைகளையும் உணவாக உட்கொள்வதினால் சிறிது காலத்தில் அவைகள் முற்றாக அப்பிரதேச காடுகளில் இருந்து அழிவடைந்து செல்லக்கூடிய மிருகமாக மாற்றமடைகின்றது.
இப்பிரச்சனையினை உடனடியாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு தற்பொழுது பொறுப்பாக உள்ள செயலாளர் ஷிஹாப்தீன் கூடிய கவனம் செலுத்தி குப்பைகளை கொட்டப்டுவதற்கான மாற்று நடவடிக்களை மேற்கொள்வதோடு, இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர், சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுச் சூழல் அமைச்சர்களும் கூடிய கவனம் செலுத்தி வாய் பேசா ஐயறிவுடன் படைக்கப்பட்டுள்ள எமது நாட்டின் தேசிய மிருகமான யானைகள் காரமுனையில் கொட்டப்படும் குப்பைகளை உணவாக உட்கொள்வதன் மூலம் அழிவடைவதிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடக நேர்காணலின் மூலம் தெரிவித்தார்.
குறித்த காரமுனை பிரதேசத்தில் குப்பைகளை உட்கொண்டு யானைகள் அழிவடைகின்றது என அம்பாந்தோட்டை காமினி தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.