Headlines
Loading...
போராட்டத்திற்கு தயார் ஊடகவியலாளர் சம்மேளனம் அறிவுறுத்தல்

போராட்டத்திற்கு தயார் ஊடகவியலாளர் சம்மேளனம் அறிவுறுத்தல்

வில்பத்து வனப் பகுதியை முஸ்லிம்களுடைய வரலாற்று காணிகளை வர்த்தமானியில் அறிவித்து வில்பத்து வனமாக தேசிய பிரகடனப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் பலரும் பல விதத்தில் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும் இந்த நிலையில் வில்பத்து வனப்பகுதியில் வனம் என்று சொல்லப்படும் முஸ்லிம்களினுடைய வரலாற்று காணி வரலாற்று தொல்பொருள் இடமாக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அது வரலாற்று காணிதான் என்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது நல்லாட்சியை அறியணை ஏற்றிய முஸ்லிம்களுக்கு எதிராக இப்படியொரு செயற்பாட்டை செய்திருப்பது கவலையளிக்கிறது என கிழக்கு மாகாண முஸ்லிம்  ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கையில் ஊடகவியலாளர்கள் என்பவர்கள் தனிப்படையாக செய்திளை  பிரசுரிப்பது மாத்திரம் அல்லாமல் சமூகத்தின் மாற்றங்களையும் தெரிவிக்க வேண்டிய கடப்பாஎட்டில் இருக்கிறார்கள் அந்த அடிப்படையில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு நன்நோக்கத்தில் அண்மையில் வில்பத்து வனப்பகுதிக்கு சென்று வந்த அந்த அனுபவத்தின் அடிப்படையிலும் வரலாற்று முஸ்லிம்களினுடைய காணிகளை திருப்பிக் கொடுத்து வர்த்தமானி அறிக்கைகளை உடன் ரத்து செய்து முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இன்னலான சூழ்நிலையை தடுக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதோடு அப்படி நடக்காவிட்டால் தொடர்ச்சியாக ஊடக போராட்டம் ஒன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் அகில இலங்கை ரீதியில் உள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களால் முன்னெடுக்கப்படுவதோடு இந்தப் போராட்டத்திற்கு பல முஸ்லிம் ஊடக அமைப்புக்கள் இது மட்டும் அல்லாது ஏனைய இதர ஊடக அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் வரலாற்று காணிகள்,முஸ்லிம்களுடைய பள்ளிவாசல்கள் ,முஸ்லிம்களுடைய வரலாற்று தொல்வியல் பிரதேசங்கள் அனைத்தையும் வனப்பகுதிகள் தொல்பொருள்வியல் திணைக்களம் என்பவை சூரையாடி இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் நல்லாட்சியை கடந்த அரசாங்கத்திலிருந்து மீட்டெடுத்து அரியணைக்கு அனுப்பியது முஸ்லிம்கள் என்பதை ஒருபோதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்திருக்க மாட்டார் எனவும் அதுமாத்திரமின்றி மக்களுக்கு சரியான பாதையில் எந்தவொரு சமூகத்திற்கும் பிரச்சினை ஏற்படாதவாறு இப்படியான செயற்பாடுகளை நிறுத்தி ஜனாதிபதி ஏனைய சமூகங்களுக்கு நல்லிணக்கமாக நல்லிணக்க பொறிமுறைக்கு உதவியாக இருப்பார் என்று எந்த நம்பிக்கையும் இனி வந்துவிடாது .

இப்படியான செயற்பாடுகளினால் ஜனாதிபதியினுயை பெயரும் நல்லாட்சியினுடைய பெயரும் இழுக்காக செல்வதை அவதானிக்க முடிகிறது. என்றாலும் கூட இப்படியான செயற்பாடுகளை நிறுத்துவதன் மூலம் முஸ்லிம்களை மட்டுமல்லாது ஏனைய சிறுபாண்மையின மக்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இந்த வர்த்தகமானி அறிவித்தலை நிறுத்துவதன் மூலமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் இந்த நடவடிக்கையை நெஸசெய்வார் என்று நம்புவதோடு இதற்கு முன்று வார காலக்கேடும் விதிப்பதோடு அப்படி நடக்காவிடில் நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராக இருப்பதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.