மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்கா முன்பாக பிற்பகல் 1:15 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் பங்குபற்றியதுடன் குறித்த தொழிற்சாலை நிர்மாண பணிகளை கைவிடுமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
Post a Comment